Primary tabs

(எ-டு.) ஓஒதல் வேண்டும் ஒளிமாழ்கும் செய்வினை, ஆஅதுவும்
என்னுமவர்.’
(குறள். 653) ‘நீயே என்குறை சொல்லல் வேண்டுமால்
அலவ!’ (அகம்.
170) ‘யான் பொருதல் வேண்டும்’ என
வருவனவற்றிற்குத்
தவிர்வாராக எனவும், சொல்வாயாக எனவும்,
பொருவேனாக எனவும் பொருள் உரைக்க. (30)
வினையெச்சங்களின் வாய்பாடு
230.
செய்து செய்யூச் செய்பு செய்தெனச்
செய்யியர் செய்யிய செயின்செயச் செயற்கென
அவ்வகை ஒன்பதும் வினையெஞ்சு கிளவி.
சிறந்தன தொகுத்து உணர்த்துகின்றது.
(இ-ள்.) செயின்
செய செயற்கு என அவ்வகை ஒன்பதும்
வினையெஞ்சு கிளவி - செய்து என்பது முதலாகச் சொல்லப்பட்ட
அக்கூற்று ஒன்பது வாய்பாடும் முற்கூறிய வினையெச்சமாம், எ-று.
வாய்பாட்டினை உகரமும்,
ஊகாரமும், புகரமும், எனவும், இயரும்,
இயவும், இன்னும், அகரமும்
குகரமும் என்னும் இறுதி
இடைச்சொல்லான் வேறுபடுத்தினார். செய்து என்பது இறந்தகாலம்
பற்றி வருங்கால் குற்றுகரத்தான் ஊரப்பட்ட, க, ட, த, ற, என்னும்
நான்கும், இகர ஈற்றும், யகர ஈறும் என அறுவகைத்து ஆமேனும்,
இகர ஈறும் யகர ஈறும் செய்து என்னும் வாசகத்தைத் தந்தே
நிற்றலின், பொருண்மையான் ஒன்றாக அடக்கப்பட்டன.
(எ-டு.) நக்கு, உண்டு, வந்து, சென்று; எஞ்சி,
தப்பி, உரிஞி, ஓடி;
ஆய், போய் என வரும்.
‘ஞகாரை

