தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tholkappiyam-nachinarkinyam

நச்சினார்க்கினியர் உரை - சொல்லதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   675


 

ஒற்றிய’ (எ.296) என்னுஞ் சூத்திரத்தான் உரிஞ் என நிறுத்தி, நிலை
மொழித் தொழிலாகிய உகரம் பெறும் என விதித்தலின், உரிஞு என்னும்
முற்றுகரந் திரிந்து உரிஞி என நின்றது என்றல் பொருந்தாமை உணர்க.
 

இனி,  ஆகு,  போகு  எனக்   குற்றுகர   ஈற்றான்   முதல்நிலை
ஆயிற்றெனின்,  ஆகினான், போகினான், என முற்றும் அதன்கண்ணே
தோன்றுதல் வேண்டும். அங்ஙனம் வழங்காமையின் ஆ, போ என்பன
முதல்நிலையாய்க்  காலங் காட்டும்  யகர  ஒற்றுப் பெற்று ஆயினான்,
போயினான்  என முற்றும் அதன்   கண்ணே   தோன்றுதலின் ஆகு,
போகு  எனக்  குற்றுகர  ஈற்று முதல்நிலை  இன்றாமென்று  உணர்க.
இதனானே   வினையெச்சம்  முற்றாய்த்   திரியும் என்பதும்  உணர்க.
அவை தூயினான், தாயினான், மேயினான், ஏயினான்,  சினைஇயினான்,
முனைஇயினான்,     உரைஇயினான்,   மரீஇயினான்,   உடீஇயினான்,
கடைஇயினான்,    தழீஇயினான்,     குழீஇயினான்,     பாராயினான்.
விராயினான், நிலாயினான்  கலாயினான் என  வரும். இவை இங்ஙனம்
முற்றாய்த்  திரிதலின், பெயர்கொண்டு முடிவன ஆயின.  ஆய், போய்
என்பன,   ‘வினை   யெஞ்சு   கிளவியும்  வேறுபல்   குறிய’  (457)
என்பதனான்  திரிந்து  நிற்கும்  என்பது கோடலின்,  திரிந்து நின்றன.
அச்சூத்திரத்து  வினையெச்சம் முற்றுவினை கொள்ளுமாறுங் காட்டுதும்.
முன்னர்க் காட்டிய உதாரணங்களுள் உகரம்  இகரமாய்த் திரியாமையும்
இவ்வாறே பிரித்து உணர்ந்து கொள்க.
 

‘விருந்தின்றி உண்ட பகலும்’ (திரிகடு.44) எனவும், ‘நாளன்று போகி’
(புறம்.124:1) எனவும் வருவன
 

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 08-09-2016 17:50:56(இந்திய நேரம்)