தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tholkappiyam-nachinarkinyam

நச்சினார்க்கினியர் உரை - சொல்லதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   677


 

கன  வெப்பு  நீங்கிற்று;  உண்டெனப்  பசி கெட்டது; உரைத்தென
உணர்ந்தான்;   மருந்து   தின்றெனப்  பிணி  நீங்கிற்று  என  வரும்.
எஞ்சியென   எனவும்,  உரிஞியென  எனவும்  ஏனை  எழுத்தோடும்
ஒட்டுக.
 

இனி,   இயர்,  இய  என்பன,  உண்ணியர்,  தின்னியர்  எனவும்,
உண்ணிய  தின்னிய  எனவும்  எதிர்காலம்  பற்றி  வரும்.  போகியர்,
போகிய என ஏற்புழிக் குகரமும் பெறும்.
 

இனி, இன் எதிர்காலம் பற்றிக் காரணப் பொருட்டாய் வரும்.

(எ-டு.)  மழைபெய்யின்  குளம்  நிறையும்;  மெய்  உணரின் வீடு
எளிதாம்  என  வரும்.  நடப்பின் உரைப்பின் என ஏற்புழிப் பகரமும்
பெறும்.  இது, ‘நனவிற் புணர்ச்சி நடக்கலும் ஆங்கே’ (கலி. 39:35) என
உம்  ஈறு ஆதலும், ‘அற்றால் அளவறிந் துண்க’ (குறள்.943) என ஆல்
ஈறு  ஆதலும்,  ‘வினை  யெஞ்சு  கிளவியும்  வேறுபல்  குறிய’ (457)
என்பதனான்  பெறப்படும்.  ‘அவா  உண்டேல் உண்டாம்’ (குறள்.1075)
என்னும்  ஏலும்,  ‘அவனெள்ளுமேனும் வரும்’ என்னும் ஏனும் இதன்
குறிப்பு. ‘ஒன்றானும் தீச்சொல்’ (குறள். 128) என்புழி, ஆயினும் என்பது
ஆனும்  எனக்  குறைந்து  நின்றது.  ‘நுணங்கிய கேள்வியர் அல்லால்’
(குறள்.   419)  என்பது,  அன்றி  என்னும்  செய்தெனெச்சக்  குறிப்பு
உணர்த்துவதொரு   வாய்பாடு;  அல்லவாயின்  என்று  பொருளாயின்,
இதன் குறிப்பாம்.
 

இனி, அகரம் இறந்தகாலத்துக்கண், மழை பெய்யக் குளம் நிறைந்தது
எனக்  காரணப்  பொருளாயும்,  குளம்  நிறைய மழை பெய்தது எனக்
காரியப்  பொருளாயும்  வரும்.  இனி, நிகழ்காலத்துக்கண், ஞாயிறு பட
வந்தான்  என்பது, நிகழாநிற்க வந்தான், என்னும்  பொருட்டாய் வரும்.
‘வாழச்  செய்த நல்வினை அல்லால் (புறம் .367) என்பதும் அது. இனி,
எதிர்காலத்துக்  கண், உண்ண வந்தான் என அதற்பொருட்டாய் வரும்.
உரைப்ப, உரைக்க என ஏற்புழிப் பகரமும் ககர
 

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 08-09-2016 17:51:18(இந்திய நேரம்)