Primary tabs

இது பெயரெச்சக் குறிப்பு; உழுது பயன்கொண்டு - இது
வினையெச்சம்; உழுது அன்றி உண்ணான்-இது வினையெச்சக் குறிப்பு.
(31)
இதுவும் அது
231.
பின்முன் கால்கடை வழியிடத் தென்னும்
அன்ன மரபிற் காலங் கண்ணிய
என்ன கிளவியும் அவற்றியல் பினவே.
இதுவும் ஒருசார் வினையெச்சம் உணர்த்துகின்றது.
(இ-ள்.) பின் முன் கால் கடை வழி இடத்து என்னும் கிளவியும் -
பின்னும் முன்னும் காலும் கடையும் வழியும் இடத்தும் என்னும்
ஈற்றவாகிய சொற்களும், அன்ன மரபிற் காலம் கண்ணிய என்ன
கிளவியும் - அம் முறைமைபோலக் காலத்தைக் குறித்த எல்லாச்
சொற்களும், அவற்று இயல்பின-முற்கூறிய ஒன்பதும் போல
வினையெச்சத்திற்கு வாய்பாடாம் இயல்பை யுடைய, எ-று.
(எ-டு.) பின்: நீயிர் பொய் கூறியபின் மெய்கூறுவார் யார்?
‘இளமையும் தருவதோ இறந்த பின்னே?’ (கலி. 15:26) என இறப்பும், நீ
இவ்வாறு கூறு கின்றபின் உரைப்பது உண்டோ? என நிகழ்வும்பற்றி
வரும். முன்: ‘வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை’ (குறள். 435) என
இறப்புப்பற்றி வரும். இவை, பின்னர், பின்னை, முன்னர், முன்னை
எனத் திரிந்தும் வரும். கால்: ‘வலனாக வினையென்று வணங்கிநாம்
விடுத்தக்கால்’ (கலி. 35:15) என இறப்பும், ‘அகன்றவர் திறத்தினி
நாடுங்கால்’ (கலி.16:3,4) என நிகழ்வும் எதிர்வும்பற்றி வரும். கடை:
‘தொடர்கூரத் துவ்வாமை வந்தக் கடை’ (கலி. 22:21,22) என
இறப்புப்பற்றி வரும். வழி: ‘விடுவழிச் விடுவழிச் சென்றாங்கவர்,
தொடுவழித் தொடுவழி நீங்கின்றாற் பசப்பே’ (கலி. 130:20,21) என
இறப்பும், ‘அவள் ஆடுவழி ஆடுவழி அகலேன் மன்னே!’ (அகம். 49:
17,18) என நிகழ்வும், உரைக்கும்வழி என நிகழ்வும் எதிர்வும்பற்றி
வரும். இடத்து: ‘களையுநர் கைகொல்லுங் காழ்த்த விடத்து’ (குறள்.
879) என இறப்பும், உரைக்குமிடத்து என நிகழ்வும் எதிர்வும்பற்றி
வரும்.
அன்னமரபின்

