Primary tabs

ராயிற்று. இனி, செய்யும் என்னும் முற்றிற்கும் உண்ணான் அவன்,
உண்ணாது அது என வரும் மறை, ஒன்றென முடித்தலான் கொள்க. (39)
இடைப் பிறவரல் இயல்பு
எச்சொல் லாயினும் இடைநிலை வரையார்.
இஃது, அவ்வெச்சங்களின் இடை நிகழும் முடிபு வேற்றுமை
கூறுகின்றது.
தத்தம் எச்சமொடு சிவணும் குறிப்பின்
எச்சொல்லாயினும் -தத்தம்
எச்சமாகிய வினையொடும் பெயரொடும் பொருள்
இயையும் கருத்தினை
உடைய வ்வகைச் சொல்லாயினும், இடைநிலை
வரையார் - அவ்
வெச்சத்திற்கும் அவற்றான்
முடிவனவாகிய தமக்கும் இடைநிற்றலை
நீக்கார் கொள்வர் ஆசிரியர், எ-று.
(எ-டு.) உழுது சாத்தன் வந்தான்; உழுது ஏரொடு வந்தான்;
சொல்லும் காட்டுள் யானை; கொன்ற காட்டுள் யானை என வரும்.
ஒருதலையாக எச்சத்தோடு இயையாது, டிக்கப்படுஞ் சொல்லோடு
இயைந்து கவர்பொருள்படுவன சிவணாக் குறிப்பினவாம். அவை,
உண்டு விருந்தொடு வந்தான்; வல்லம் எறிந்த நல்லிளங்கோசர் தந்தை
மல்லல் யானைப் பெருவழுதி என்புழி, விருந்தொடு உண்டு எனவும்,
வல்லம் எறிந்த கோசர் எனவுங் கவர்பொருள் பட்டு வரும்.
‘எச்சொல் லாயினும்’ என்றதனான், உழுது ஓடி வந்தான்; கவளம்
கொள்ளாச் சுளித்த யானை
(சீவக. 1076) என எச்சமும் இடைநிலை
ஆதல் கொள்க. அறத்தை அரசன் விரும்பினான்; உண்டான் பசித்த
சாத்தன்
என ஏனைத் தொடர்க்கண்ணும் பிறசொல் இடைநிற்றல்
ஒன்றென முடித்தலாற் கொள்க. (40)
செய்யும் என்னும் பெயரெச்ச ஈறு கெடுமாறு
240. அவற்றுள்,
செய்யு மென்னும் பெயரெஞ்சு கிளவிக்கு
மெய்யொடுங் கெடுமே ஈற்றுமிசை யுகரம்
அவ்விட னறிதல் என்மனார் புலவர்.
இது, செய்யுமென்பதற்கு

