Primary tabs

ஈறுகெடுமாறு கூறுகின்றது.
(இ-ள்.) அவற்றுள் - முற்கூறிய இருவகை எச்சங்களுள், செய்யும்
என்னும் பெயர் எஞ்சு கிளவிக்கு-செய்யும்
என்னும் பெயரெச்சத்திற்கு,
ஈற்றுமிசை உகரம் மெய்யொடும் கெடும்-ஈற்றெழுத்தின்மேல் நின்ற
உகரம் தன்னான் ஊரப்பட்ட மெய்யொடுங் கெடும்; அவ்விடன்
அறிதல் என்மனார் புலவர்-அக் கெடும் இடம் அறிக, என்று கூறுவர்
புலவர், எ-று.
(எ-டு.) ‘வாவும் புரவி வழுதியோ டெம்மிடை’ ‘யான் போகும் புழை’ என்பன வாம்புரவி, போம்புழை என நின்றன.
‘செய்யும் என்னும் பெயர்எஞ்சு கிளவிக்கு, ஈற்றுமிசை உகரம்
மெய்யொடும் கெடும்,’ எனவே, செய்யும் என்னும் முற்றுச்சொற்கு
ஈற்றுமிசை உகரம் மெய்யொடுங் கெடும், மெய் ஒழித்துங் கெடும்
என்பது பெறுதும்.
(எ-டு.) ‘அம்பல் ஊரும் அவனொடு மொழிமே.’ (குறுந். 51)
‘சாரல் நாட! என் தோழியும் கலுழ்மே’ என வரும். (41)
இறந்தகால வினையெச்சம் ஏனைக் காலச்
சொல்லோடும் இயையும்
241.
செய்தெ னெச்சத் திறந்த காலம்
எய்திட னுடைத்தே வாராக் காலம்
இஃது, இறந்தகாலச் சொல் ஏனைக்காலச் சொல்லோடு
இயையு மென்கின்றது.
(இ-ள்.)
செய்து என் எச்சத்து இறந்த காலம்-செய்து என்னும்
வினையெச்சத்தினது இறந்தகாலம் தன் இறந்தகாலத்தினை நீங்காது
நின்று, வாராக் காலம் எய்து இடன் உடைத்து - முடிக்குஞ் சொல்லின்
எதிர் காலத்தைப் பொருந்தும் இடம் உடைத்து, எ-று.
(எ-டு.) நீ உண்டு வருவாய் என்பது நாளை உண்டு வருவாய்
என்னும்
பொருள் உணர்த்தவும், வருதல் தொழிலுக்கு உண்டல்
தொழில் முன் நிகழ்ந்து,
ஆண்டும் தன் இறந்த காலமே
உணர்த்திற்றாம். கொடி ஆடித் தோன்றும் என்புழித் தோற்றமும்
ஆட்டமும் உடன் நிகழ்தலின், செய்து என்பது நிகழ்

