Primary tabs

காலத்திற்கும் உரித்து ஆதல் வாராக் காலம் எனவே அடங்கும்,
‘வறனீந்தி நீ செல்லும் நீளிடை நினைப்பவும்’ (கலி. 3:2)
என்பதும் அது.
ஒன்றென முடித்தலான், செய்யூ, செய்பு, என்பனவற்றிற்கும்
ஒழிந்த எச்சங்கட்கும் இம்மயக்கங் கொள்க. (42)
நிகழ்காலச்சொல் ஏனைக் காலங்களையும் உணர்த்தல்
242.
முந்நிலைக் காலமுந் தோன்றும் இயற்கை
எம்முறைச் சொல்லும் நிகழுங் காலத்து
மெய்ந்நிலைப் பொதுச்சொற் கிளத்தல் வேண்டும்.
இது, நிகழ்காலச் சொல் ஏனைக் காலங்களையும் உணர்த்தும்
என்கின்றது.
(இ-ள்.) முந்நிலைக் காலமும் தோன்றும் இயற்கை எம்முறைச்
சொல்லும்-மூன்று
வகைப்பட்ட நிலைமையினையுடைய காலத்தும்
உளதாம் இயல்பையுடைய எவ்வகைப்பட்ட
பொருளையும்,
நிகழுங்காலத்து மெய்ந்நிலைப் பொதுச்சொல் கிளத்தல்
வேண்டும் - நிகழ்காலத்திற்கு உரித்தாய் நின்றும் ஏனைக்
காலங்களையும் உள்ளடக்கி நிற்கும் பொருள் நிலைமையினையுடைய
செய்யும் என்னுஞ் சொல்லான் சொல்லுதலை விரும்பும்
ஆசிரியன், எ-று.
முக்காலத்திற்கும் பொதுவாய் முற்றும் எச்சமுமாய் நிற்றலை
நோக்கிப் ‘பொதுச்சொல்’ என்றார்.
(எ-டு.) மலை நிற்கும்; தீச் சுடும்: ஞாயிறு இயங்கும்; திங்கள்
இயங்கும் எனவும்,
‘வெங்கதிர்க் கனலியொடு மதிவலம் திரிதரும்,
தண்கடல் வரைப்பு’
(பெரும்பாண். 17,18) எனவும் வரும்.
‘தீச்சுடும்’ என்றால்,
பண்டும் இன்றும் மேலும் சுடும்என்பதனை
ஒப்பவிளக்கியவாறு காண்க. ‘மெய்ந்நிலை’
எனறது, ஏனை நிகழ்காலச்
சொல்லோடு ஒவ்வாமையை உணர்த்துதற்கு. (43)
விரைவின்கண் காலம் மயங்கல்
243. வாராக் காலத்தும் நிகழுங் காலத்தும்
ஓராங்கு வரூஉம் வினைச்சொற் கிளவி
இறந்த காலத்துக் குறிப்பொடு கிளத்தல்
விரைந்த பொருள என்மனார்

