தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

Tholkappiyam-nachinarkinyam

நச்சினார்க்கினியர் உரை - சொல்லதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   695


வேண்டுதல்  சாத்தனதாயும், சாத்தன்   என்னும்  எழுவாய், ஓதுதல்
என்னும்      வினைப்பெயர்     கொண்டவழி    இவ்  வேண்டுதல்
தந்தைமேலும் தாய்மேலும் நின்றவாறு காண்க. (46)   

வற்புறுத்தலின் வினா எதிர்மறைப்பொருள் தரல் 

246. வன்புற வரூஉம் வினாவுடை வினைச்சொல்
எதிர்மறுத் துணர்த்துதற் குரிமையும் உடைத்தே.
  

இதுவும் வினைச்சொல் பொருள்படும் வேறுபாடு கூறுகின்றது.   

(இ-ள்.)  வன்புற  வரூஉம்   வினாவுடை வினைச்சொல் - ஒருவன்
இன்னாங்கு  உரைத்தான்  என்று   ஒருவன்  மனங்கொண்டிருந்தவழித்
தான்   அவ்வின்னாங்கு      உரையாமையை    அவன்    மனத்து
வலியுறுத்துதற்கு     வரும்     வினாவினையுடைய    வினைச்சொல்,
எதிர்மறுத்து     உணர்த்துதற்கு     உரிமையும்     உடைத்து     -
அவ்வுரையாமையை   உணர்த்துகின்ற    நிலைமையை  மறுத்துத்தான்
உரைத்தானாக      உடம்பட்டமையை    அவற்கு    உணர்த்துதற்கு
உரிமையினையும் உடைத்து, எ-று. 

உம்மை     எதிர்மறை    ஆகலான்,  மறுத்தல்  பெரும்பான்மை;
நேர்தல் சிறுபான்மையாம்.

ஆ,   ஏ, ஓ   என்பன  வினா. ஒருவன் கதத்தானாக களியானாக
மயங்கி       இன்னாங்கு     உரைத்துப்    பின்   தெருண்டவழி,
அவ்வின்னாங்கு உரைக்கப்பட்டான், நீ எனனை வைதாய்  என்றக்கால்,
யான் வைதேனோ? எனத்தான்  வையாமையை     வலியுறுத்துதற்குக்
கூறியதுதானே,      அப்பொழுதுவைதேன்;      நோகாதே!    என
நேர்ந்தமைபடவும்   நிற்கும். இனி, தான்வைதமையை  வலியுறுத்துதற்கு
வரும்  ‘வைதேனே?’      என்னுஞ் சொல்வைதிலேன்      என்னும்
எதிர்மறையை  உணர்த்திநிற்கும்   என்றலுமாம்.(47) 

இயற்கையினும் தெளிவினும் காலம் மயங்கல்  

247. வாராக் காலத்து வினைச்சொற் கிளவி
இறப்பினுஞ் நிகழ்வினுஞ் சிறப்பத் தோன்றும்
இயற்கையுந் தெளிவுங் கிளக்குங் காலை.  

இஃது எதிர்வு, இறப்பொடும் நிகழ்
 

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 08-09-2016 17:54:39(இந்திய நேரம்)