Primary tabs

கொன்றான், கொல்வான்; என்பன முதலியன மிக்க வினைச் சொல்.
சுவர்க்கம் புகாநிற்பன், நிரயம் புகாநிற்பன் என்பன அவ்வப்பண்பு
குறித்த வினை முதற்கிளவி. இவை சுட்டி ஒருவர் பெயர் கொள்ளாமல்,
யாவன் தவஞ்செய்தான் அவன் சுவர்க்கும் புகும்; யாவன் தாயைக்
கொன்றான் அவன் நிரயம் புகும் எனவும், ஒருவன் தவம் செய்யின்,
துறக்கம் புகும்;
ஒருவன் தாயைக் கொல்லின், ரயம் புகும்
எனவும் வரும்.
இங்ஙனம் பொதுவகையாற் கூறாது, சாத்தன் தவஞ்செய்து துறக்கம்
புக்கான்; சாத்தன் தவம் செய்யின், துறக்கம் புகுவன் எனச் சுட்டி
ஒருவர்
பெயர் கொண்டவழி ஏனைக் காலங்களான்
கூறப்படுதலின், ‘செய்வதில் வழி’ என்றார். வினைச்சொல்
என்றாரேனும், தவஞ் செய்தான்; தாயைக் கொன்றான் என
வினைப்பெயராய் வருதலுங் கொள்க. (45)
இது செயல் வேண்டும் என்பது ஈரிடத்துப் பொருள் தரல்
245.
இருவயின் நிலையும் பொருட்டா கும்மே
தன்பா லானும் பிறன்பா லானும்.
இது, முற்றுச்சொல் பொருள்தரும் வேறுபாடு கூறுகின்றது.
இ-ள்.) இது செயல்வேண்டும் என்னும் கிளவி-இக்
காரியத்தினைச் செயல் வேண்டும், என்று சொல்லப்படும்
முற்றுச்சொல், தன்பாலானும் பிறன்பாலானும் இருவயின் நிலையும்
பொருட்டு ஆகும்மே - அக்காரியத் தினைச் செய்வான்
தன்னிடத்தும், அவன் செயலை வேண்டியிருப்பான் பிறன்
ஒருவனிடத்தும் என்ற இரண்டிடத்தும் நிலைபெறும்
பொருண்மையை உடையதும், எ-று.
(எ-டு.) சாத்தன் ஓதல் வேண்டும் என்புழி,
(வேண்டும் என்னும் முற்றுச்சொல்) ஒருவழிச் சாத்தன் என்பது
எழுவாயாய் வேண்டும் என்னும் பயனிலையொடு முடிந்துழி அவ்

