Primary tabs

சநிலையாமாறுங் கூறுகின்றது.
(இ-ள்.) மற்று என் கிளவி வினைமாற்று அசைநிலை அப்பால்
இரண்டு என மொழிமனார் புலவர்-மற்று என்னுஞ் சொல் முன்
சொல்கின்றது ஒழிய இனி வேறு ஒன்று என்னும் பொருண்மையும்,
அசைநிலை ஆதலும் என்னும் அக்கூற்று இரண்டாம் என்று கூறுவர்
புலவர், எ-று.
(எ-டு.) இனி மற்றொன்று உரை, ‘மற்றறிவாம் நல்வினை
யாமிளையம்’ (நாலடி. 19) ‘மற்றுங் கூடும் மனைமடி துயிலே’ (நற். 360)
எனத் தொழிலுங் காலமும் இடமும்பற்றி வரும். ‘அதுமற் றவலம்
கொள்ளாது’ (குறுந். 12) என்பது அசைநிலை.
உரையாடாநின்றுழிப் பொருள் குறியாத மற்றோ எனவும் அசை
நிலை வரும் என்பாரும் உளர்.. (14)
எற்று என்னும் இடைச்சொல்லின் பொருள்
265.
எற்றென் கிளவி இறந்த பொருட்டே.
இது, பொருள்படுமாறு கூறுகின்றது.
(இ-ள்.)
எற்று என் கிளவி இறந்த பொருட்டே - எற்று என்னுஞ்
சொல் ஒன்றிடத்துநின்றும் ஒன்று போயிற்று என்னும் பொருண்மை
உணர்த்துதல் உடைத்து, எ-று.
(எ-டு.) ‘எற்றென் உடம்பின் எழில்நலம்.’இஃது, என் நலம் இறந்தது
என நின்றது. ‘எற்றேற்றம் இல்லாருள் யானேற்றம் இல்லாதேன்’
என்பதூஉம், இப்பொழுது துணிவு இல்லாருள் துணிவு இல்லாதேன்
யான், என்று துணிவு இறந்தது என்பது பட நின்றது. (15)
மற்றை என்னும் இடைச்செல்லின் பொருள்
266.
சுட்டுநிலை யொழிய இனங்குறித் தன்றே.
இதுவும் அது.
மற்றையது என்னும் கிளவிதானே - மற்றையது என்ற
பெயர்க்கு முதல் நிலையாய் வரும் மற்றை என்னும் ஐகார ஈற்று
இடைச்சொல், சுட்டுநிலை ஒழிய இனம் குறித்தன்றே-ஒருவன்
முன்னர்க் கருதப்பட்ட பொருளொழிய அதன் இனப்பொருளைக் கருதி
நிற்கும், எ-று.
(எ-டு.) ஆடை கொணர்ந்தவழி, அவ்வாடை வேண்டாதான்,
மற்றையது கொண்டுவா என்றால், அதற்கு இனமாகிய பிற ஆடை
குறித்து நிற்கும். இனிச் சிறுபான்மை மற்றை ஆடை எனத் தானேயும்
வரும்.
அஃது, அவன் என்னுந் தொடக்கத்தனவற்றிற்கு மற்றை யஃது,
மற்றையவன் என அவ்விடைச்சொல் முதனிலையாய் வருதலின்,
மற்றை என இடைச்சொல்லைப் பிரித்தோதாது, மற்றையது என
ஒன்றாக

