Primary tabs

ஓதினார். (16)
மன்ற என்னும் இடைச்சொல்லின் பொருள்
267. மன்றவென் கிளவி தேற்றஞ் செய்யும்.
இதுவும் அது.
(இ-ள்.) மன்ற என் கிளவி தேற்றம் செய்யும்-மன்ற என்னுஞ் சொல்
தெளிவுப்பொருண்மை உணர்த்தும், எ-று.
(எ-டு.) ‘மடவை மன்ற வாழிய முருகே!’ (நற்.34) என மன்ற
அறியாமையையே தெளிவித்தது. (17)
தஞ்சம் என்னும் இடைச்சொல்லின் பொருள்
268.
இதுவும் அது.
(இ-ள்.) தஞ்சக் கிளவி எண்மைப் பாருட்டே - தஞ்சம் என்னுஞ்
சொல் எளிது என்னும் பொருண்மையை உடைத்து எ-று.
(எ-டு.) ‘முரசுகெழு தாயத்தரசோ தஞ்சம்’ (புறம். 73:3)
எனத்
தஞ்சம் அரசு கொடுத்தல் எளிது என நின்றது. (18)
அந்தில் என்னும் இடைச்சொல்லின் பொருள்
269.
ஆயிரண் டாகும் இயற்கைத் தென்ப.
இது, பொருள்படுமாறும் அசைநிலையாமாறுங் கூறுகின்றது.
(இ-ள்.)
அந்தில் ஆங்கு அசைநிலைக் கிளவி என்று ஆயிரண்டு
ஆகும் இயற்கைத்து என்ப- அந்தில் என்னுஞ் சொல் ஆங்கு என்னும்
இடப் பொருள் உணர்த்துதலும் அசைநிலைச்சொல் ஆதலும் என்னும்
அவ்விரண்டு கூறாம் இயற்கையை யுடைத்து என்று கூறுவர் புலவர்,
எ-று.
(எ-டு.) ‘வருமே சேயிழை அந்தில்,’
(குறுந். 293) ‘அந்தில்
கச்சினன் கழலினன்’ (அகம்.76:6,7) என இடமும் அசைநிலையுமாய்
நின்றது. (19)
கொல் என்னும் இடைச்சொல்லின் பொருள்
270.
இது, ‘கொல்’ பொருள்படுமாறு கூறுகின்றது.
கொல்லே ஐயம் - கொல் என்னுஞ் சொல் ஐயப்
பொருண்மையை உணர்த்தும், எ-று.
(எ-டு.) ‘யாதுகொல் மற்றவர் நிலையே!’ (அகம்.139:17)
‘அதனை வுண்டுகொல் மதிவல் லோர்க்கே!’ (அகம். 48:26)
எனத்துணி வின்கண் ஐயஞ் சிறிது நினைத்தலும் ஒன்றென
முடித்தலான் கொள்க. (20)
எல் என்னும் இடைச்சொல்லின் பொருள்
271.
இதுவும் அது.
(இ-ள்) எல்லே இலக்கம்
- எல் என்னுஞ் சொல் விளங்குதற்
பொருண்மை உணர்த்தும், எ-று.
(எ-டு.) ‘எல்வளை எம்மொடு நீ வரின்’ (கலி.13:10) என வரும். (21)
ஆர் என்னும் இடைச்சொல் முடிபு
272.
பலர்க்குரி எழுத்தின் வினையொடு முடிமே.
இஃது, ஆர் என்னும் இடைச்சொல் முடிபு கூறுகின்றது.
(இ-ள்) யற்பெயர் முன்னர் ஆரைக்கிளவி - இரு திணைக்கும்
இயலும்
பெயர்க்கும்

