Primary tabs

முன்னர் வரும் ஆர் என்னும் இடைச்சொல், பலர்க்கு உரி
எழுத்தின் வினையொடு முடிமே - ரஃகான் ஒற்றினை ஈறாக உடைய
வினைச்சொல்லான் முடியும், எ-று.
(எ-டு.) பெருஞ்சேந்தனார் வந்தார்; முடவனார் வந்தார்; முடத்தாமக்
கண்ணியார் வந்தார்; தந்தையார் வந்தார் எனவும், கிளியார் வந்தார்
எனவும் வரும்.
பெரும்பான்மை இயற்பெயர் கூறவே, நம்பியார் வந்தார்; நங்கையார்
வந்தார் எனச் சிறுபான்மை உயர்திணைப்பெயர் முன்னரும் வருதல்
ஒன்றென முடித்தலாற் கொள்க. இவை தாம் ரகர ஈற்றுப் பெயர்
அன்மையின், விளியேற்குமிடத்து இகர ஈறும் ஐகார ஈறுமாய் நின்றே
விளியேற்கு மென்று உணர்க. ஒருமைப்பெயர்நின்று ஆரைக்கிளவியை
ஏற்றலின், இவை ஒருவரைக் கூறும் பன்மைக்கிளவியின் (27)
வேறாயின. (22)
ஆர் என்பதற்குப் புறனடை
273.
இது, மேலதற்குப் புறனடை.
(இ-ள்.)
அசைநிலைக் கிளவி ஆகுவழி அறிதல்-அவ் ‘ஆர்’
என்னுஞ் சொல் அசைநிலைச் சொல்லாம் இடம் அறிக, எ-று.
ஆகுவழி அறிதல், என்றதனான், உம்மை முன்னரும் உம்ஈற்று
வினை முன்னரும் வருதல் கொள்க.
(எ-டு.) பெயரினாகிய தொகையுமார் உளவே.’ (68) ‘எல்லா
உயிரொடும் செல்லுமார் முதலே’ (எ.61) என வரும். (23)
ஏ, குரை என்னும் இடைச்சொற்களின் பொருள்
274.
ஏயுங் குரையும் இசைநிறை அசைநிலை
ஆயிரண் டாகும் இயற்கைத் தென்ப.
இஃது, இசைநிறையும் அசைநிலையும் கூறுகின்றது.
(இ-ள்.) ஏயும் குரையும் இசைநின்ற அசைநிலை ஆயிரண்டு ஆகும்
இயற்கைத்து என்ப - ஏ என்னும் இடைச்சொல்லும் குரை என்னும்
இடைச்சொல்லும் இசைநிறையும் அசைநிலையும் என ஓரோவென்று
அவ்விரண்டு இயல்பினை உடைத்து என்று கூறுவர் ஆசிரியர், எ-று.
(எ-டு.) ‘ஏஎ இஃதொத்தன் நாணிலன் தன்னொடு (கலி.62:1)...இஃது
இசைநிறை. ஏஎ யெனச்
சொல்லியது - இஃது அசைநிலை. ‘அளிதோ
தானேயது பெறலருங் குரைத்தே’ (புறம். 5:9) - இஃது இசைநிறை. ‘பல்
குரைத் துன்பங்கள் சென்று படும்.’ (குறள். 1045) - இஃது அசைநிலை.
தேற்றேகா

