தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tholkappiyam-nachinarkinyam

நச்சினார்க்கினியர் உரை - சொல்லதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   711


ரம் முதலியன போலச்  சார்ந்த மொழியோடு ஒன்றுபட்டு இசையாது
தொடர்மொழி முதற்கட் பிரிந் திசைத்தலின் வேறு கூறினார். (24) 

மா என்னும் இடைச்சொல் வருமாறு

275. மாவென் கிளவி வியங்கோள் அசைச்சொல் 

இஃது, அசைநிலை கூறுகின்றது. 

(இ-ள்.)    மா என் கிளவி வியங்கோள் அசைச்சொல்-மா என்னும்
இடைச்சொல்  பெரும்பான்மை வியங்கோளைச் சார்ந்து அசைநிலையாய்
வரும், எ-று. 

(எ-டு)  ‘புற்கை உண்கமா கொற்கை யோனே!’ என வரும். (25) 

முன்னிலை அசைச்சொற்கள்

276. மியாஇக மோமதி இகுஞ்சின் என்னும்
ஆவயி னாறும் முன்னிலை அசைச்சொல். 

இதுவும் அது. 

(இ-ள்.)     மியா இக  மோ  மதி  இகும் சின் என்னும் ஆவயின்
ஆறும்-மியா,  இக,  மோ,  மதி,  இகும்,  சின்  என்று சொல்லப்பட்ட
அவ்விடத்து  இடைச்சொல்  ஆறும்,  முன்னிலை  அசைச்  சொல்  -
முன்னிலைப் பொருளை உணர்த்தும் அசைச்சொல்லாம் எ-று. 

(எ-டு.)   கேண்மியா, சென்மியா எனவும், ‘கண்பனி யான்றிக என்றி
தோழி!’  எனவும்,  ‘காமம்  செப்பாது  கண்டது  மொழிமோ.’ (குறுந்.2)
எனவும்,  ‘உரைமதி  வாழியோ  வலவ!’  எனவும்,  ‘மெல்லம்  புலம்ப!
கண்டிகும்’   எனவும், ‘காப்பும் பூண்டிசின் கடையும் போகலை.’ (அகம்.
7:5) எனவும் வரும். (26) 

இகும், சின் என்பவற்றிற்குப் புறனடை

277. அவற்றுள்,
இகுமுஞ் சின்னும் ஏனை யிடத்தொடும்

தகுநிலை யுடைய என்மனார் புலவர். 

இது, மேலதற்குப் புறனடை கூறுகின்றது. 

(இ-ள்.) அவற்றுள்     இகுமும்    சின்னும்- முற்கூறிய  ஆறனுள் இகுமுஞ்சின்னும்,  ஏனை  இடத்தொடும்  தகுநிலை உடைய என்மனார்
புலவர் - ஒழிந்த   தன்மைச் சொல்லொடும் படர்க்கைச் சொல்லொடும் பொருந்தும் நிலைமையுடைய என்று கூறுவர் புலவர், எ-று. 

(எ-டு.)   ‘கண்டிகும் அல்லமோ!’ (ஐங்குறு. 121) ‘கண்ணும் படுமோ
என்றிசின் யானே,  (நற்.61)  எனத்  தன்மைக்கண்ணும்,   ‘புகழ்ந்திகும்
அல்லரோ பெரிதே.’ ‘யாரஃதறிந்திசி  னோரே’ (குறுந்.18) எனப்
   

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 08-09-2016 17:57:38(இந்திய நேரம்)