தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

Tholkappiyam-nachinarkinyam

நச்சினார்க்கினியர் உரை - சொல்லதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   715


 

இசைக்கும் ‘உயிர்ஒள எஞ்சிய இறுதியாகும்,’ (எழுத்.69) என்றதனான்
மொழிக்கு  ஈறாகாது என்ற ஒளகாரம், ஆயியல் நிலையும் காலத்தானும்
‘கவவோ  டியையின்  ஒளவு  மாகும்,’ (எ.70) என்ற இயல்பின் கண்ணே
கௌ,   வௌ  என  மொழிக்கு   ஈறாய்  நிற்குங்  காலத்துக்கண்ணும்
(எவ்வாறு   நிற்கும்?  எனின்),   அளபெடை  நிலையும்  காலத்தானும்
அளபெடை இன்றித் தான் வரு  காலையும் உள என மொழிப பொருள்
வேறுபடுதல்-அவை  அளபெடுத்து  நிற்குங்  காலத்தினும் அளபெடாது
நிற்குங்   காலத்தினும்  பொருள்வேறுபடுதல்  உளது  என்று  கூறுவர்
ஆசிரியர்;  குறிப்பின் இசையான்   நெறிப்படத் தோன்றும்-அப்பொருள்
வேறுபாடு   தான்   சொல்லுவான்   குறிப்பினான்   உளதாம்   ஓசை
வேறுபாட்டான் வழிப்படப் புலப்படும், எ-று.
 

முன்னர்நின்ற உம்மை   சிறப்பும்மை.   பின்னர்  நின்ற  இரண்டும்
எண்ணும்மை.
 

ஆசிரியர்  முன்னர்க் கூறியதனை ஈண்டும் இறுதியில் உயிரே என்று
‘ஒருதலைமொழி’     என்னும்      உத்தியாகக்     கூறினமையானும்,
உரையாசிரியரும், ‘நெட்டெழுத் தேழே ஓரெழுத் தொருமொழி’ (எ.43)
என்புழி  ஒளகாரத்  தினை உதாரணங் காட்டாது, ‘கவவோ, டியையின்’
(எ.70)  என்பதனான் கௌ  வௌ என உதாரணங் காட்டினமையானும்,
ஈண்டு,  ‘அளபெடை   நிலையும்  காலத்தானும்  அளபெடை  இன்றித்
தான்வரு   காலையும்’  என்னும்  இரண்டற்கும்  ஒளஉ,  ஒள  என்று
உயிரையே  உதாரணமாகக்  காட்டுதல் ‘மாறுகொளக் கூறல்’ ஆமென்று
உணர்க.
 

(எ-டு.)  கௌஉ என அளபெடுத்தவழிக் கைக்கொண்டேவிடு எனத்
துணிவும்,   கௌ   என    அளபெடாதவழி  நினக்குக்  கருத்தாயின்,
கைக்கொள் என ஐயமும்  உணர்த்தும். இது வௌ என்பதற்கும் ஒக்கும்.
இனி,  ஒளகாரம்  அளபெடுத்துழி  உகர ஈறாயே நிற்றலின், ஒளஉ என
உகர  ஈறாகிய  ஒளகாரமும  ஈண்டுக்கோடும். இது வியப்பு உணர்த்தும்.
அளபெடா ஒளகாரம் ஆகாதென்று உணர்க. (33)
 

சொல்லுவான் குறிப்பொடு பொருள் உணர்த்துவன
 

284.
 

நன்றீற் றேயும் அன்றீற் றேயும்
அந்தீற் றோவும் அன் 

 

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 08-09-2016 17:58:22(இந்திய நேரம்)