தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tholkappiyam-nachinarkinyam

நச்சினார்க்கினியர் உரை - சொல்லதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   714


எ-று. 

(எ-டு.)   ‘காரெதிர் கானம் பாடினே மாக’ (புறம். 144:3) ‘இனைதல்
ஆனாளாக’  (புறம்.144:6)  ‘சொல்லற்  பாணி நின்றன னாக’ (குறிஞ்சிப்.
152)   எனச்   செயவெனெச்சம்  முற்றாய்த்  திரிவுழி  ஆக  என்னும்
இடைச்சொல்     வந்து     அவற்றின்     பொருளே    உணர்த்திச்
செயவெனெச்சமாய்   நின்றது.  இவ்வினையெச்சமுற்று  வினைமுதலைக்
கொள்ளும்வழி, ஆகல் என்னும் இடைச்சொல்லைப் பெற்று நிற்கும். 

‘அருளா யாகலோ கொடிதே’ (புறம்.144:1) ‘தன் பெயராகலின் நாணி’
(புறம்.152:22)   ‘அனையை  யாகன்  மாறே’  (புறம்.4:17)  என  ஆகல்
என்னும்   வினைக்குறிப்புச்சொல்  சார்ந்து  நின்ற  சொற்பொருளையே
உணர்த்தி     நின்ற    சொற்பொருளையே    உணர்த்தி    நின்றது.
தெரிநிலைக்கும்  குறிப்பிற்கும்  உரிய  இவ்விரண்டு இடைச்சொற்களும்
சிறுபான்மைய ஆகலின், வினையியற்கண் எடுத்து ஓதாராயினார். 

‘நடுங்குநோய்     தீரநின்  குறிவாய்த்தாள் என்பதோ......துறந்ததை’
(கலி.127:7,9)     ‘எறிதிரை       இமிழ்கானல்     எதிர்கொண்டாள்
என்பதோ......துறந்ததை’  (கலி.  127:  11,13)  என்புழி ‘என்பது’ என்றது,
என்று சொல்லப்படுவது  என்னும் பொருள் தந்து நில்லாது, வாய்த்தாள்.
எதிர்  கொண்டாள்  என்னுஞ் சொற்கள் உணர்த்திய செய்ந்நன்றியைத்
தானும் உணர்த்திநின்றவாறு காண்க. 

இவை     தாஞ்  சார்ந்த சொல்லை அசைத்தே நிற்கும் என்றலின்,
பிரிவில்  அசைநிலை என்றார். இங்ஙனம் நில்லாது, வழக்கின்கண் ஆக
ஆக  என  அடுக்கி  வந்து,   உடம்படாமையும் ஆதரமின்மையுமாகிய
பொருள்   தந்து   நிற்கும்   என்றல்  அசைநிலைக்கு  ஆகாமையின்,
அவ்வாறு கூறுதல் பொருளன்மை உணர்க. (32) 

ஒள என்பதன் பொருள் வேறுபாடு

283. ஈரள பிசைக்கும் இறுதியில் உயிரே
ஆயியல் நிலையுங் காலத் தானும்
அளபெடை நிலையுங் காலத் தானும்
அளபெடை யின்றித் தான்வரு காலையும்
உளவென மொழிப பொருள்வேறு படுதல்
குறிப்பின் இசையான் நெறிப்படத் தோன்றும் 

இது, பொருள் வேறுபடுமாறு கூறுகின்றது. 

(இ-ள்.)  ஈரளபு  இசைக்கும்  இறுதியில்   உயிரே   -   இரண்டு
மாத்திரையை
  

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 08-09-2016 17:58:11(இந்திய நேரம்)