Primary tabs

இடையிட்டுக் கொளினும் - ஏகார எண்ணைத் தன்னிடத்தே
அழைத்துக் கொண்டு நிற்பினும், எண்ணுக் குறித்து இயலும் என்மனார்
புலவர் - பல எண் வந்தனவென்று குற்றமாகா, தான் உணர்த்தும்
எண்ணுப் பொருளையே அப்பலவுங் குறித்து நடக்குமென்று கூறுவர்
புலவர், எ-று.
(எ-டு.) ‘மலைநிலம் பூவே துலாக்கோலென் றின்னர், உலைவில்
உணர் வுடையோர்.’ ‘தோற்றம் இசையே நாற்றம் சுவையே, உறலோ
டாங்கைம் புலனென மொழிப, இவை செவ்வெண் நின்று ஏகார
எண்ணை இடையிட்டன. ‘மாத்திரை எழுத்தியல் அசைவகை எனாஅ’
(செய்.1) என்பது, செவ்வெண் நின்று ‘எனா’ எண்ணை இடையிட்டது.
‘வண்ணம்
வடிவே அளவே சுவையே’ (79) என்னுஞ் சூத்திரம்,
செவ்வெண் நின்று, ஏகார எண்ணையும் ‘என்றா’ என்னும் எண்ணையும்
இடையிட்டது. யாத்த சீரே அடியாப் பெனாஅ’ (செய்.1) என்பது, ஏகார
எண் செவ்வெண்ணையும் எனாவையும் இடையிட்டது. ஒழிந்த
எண்களும் இவ்வாறு வருமாறு சூத்திரங்களுள்ளுஞ் செய்யுட்களுள்ளுங்
காண்க. (40)
எனா, என்றா இரண்டும் எண்ணில் வருதல்
291.
உம்மை தொக்க எனாவென் கிளவியும்
ஆவீ றாகிய என்றென் கிளவியும்
ஆயிரு கிளவியும் எண்ணுவழிப் பட்டன.
இஃது, எண்ணும்மை பிற எண்ணொடு மயங்குங்கால் சிறந்துவரும்
என்கின்றது.
(இ-ள்.) உம்மை தொக்க எனா என் கிளவியும்-முன்னர்
எண்ணும்மை அடுக்கி நின்ற ‘எனா’ என்னும் இடைச்சொல்லும், ஆ
ஈறு ஆகிய என்று என் கிளவியும்-முன்னர் எண்ணும்மை அடுக்கி
நின்ற ஆகாரத்தை ஈறாக உடைய ‘என்று’ என்னும் இடைச் சொல்லும்,
ஆயிரு கிளவியும் எண்ணு வழிப்பட்டன-அவ்விரண்டு சொல்லும்
எண்ணுமிடத்தே சிறந்துவரும், எ-று.
(எ-டு.) ‘ஒப்பும் உருவும் வெறுப்பும் என்றா’ (பொருளியல் 51)
என்னுஞ் சூத்திரம், உம்மை தொக்க என்றாவிற்கு உதாரணம்.
உம்மைதொக்க ‘எனா’ வந்துழிக் காண்க.
இனி, ‘உம்மை தொக்க’ என்பதற்கு ‘நிலன் எனாவும்’ என்பது ஈற்று
நின்ற உம்மை தொக்கு ‘நிலன் எனா’ என்றல் வழக்கம் இன்மையானும்,
எனாவும் என்றாவும் எண்ணிடைச் சொல்லாதல் மேலிற்சூத்திரத்தான்
பெறப்படுதலானும், இதுவே ஆசிரியர் கருத்து. (41)
எண்ணிடைச் சொற்களுக்கு முடிபு வேற்றுமை
292.
அவற்றின் வரூஉம் எண்ணி னிறுதியும்
பெயர்க்குரி மரபிற் செவ்வெ ணிறுதியும்
ஏயின் ஆகிய எண்ணி னிறுதியும்
யாவயின் வரினுந் தொகையின் றியலா
இஃது, எண்ணிடைச் சொற்கட்கு முடிபு வேற்றுமை கூறுகின்றது.
(இ-ள்) அவற்றின் வரூஉம் எண்ணின் இறுதியும்-முற்கூறிய எனா,
என்றா என்பனவற்றான் வரும் எண்ணுச் சொற்களின் இறுதியும்,
பெயர்க்கு உரி மரபிற் செவ்வெண் இறுதியும் - இடைச் சொல்லான்
அன்றிப் பெயரான் எண்ணப்படும் செவ்வெண்ணின் இறுதியும், ஏயின்
ஆகிய

