Primary tabs

எண்ணின் இறுதியும்-ஏகாரத்தான் வரும் எண்ணுச் சொற்களின்
இறுதியும், யாவயின் வரினும் தொகை இன்று இயலா-யாதானும்
ஓரிடத்துவரினும் தொகை இன்றி நடவா, எ-று.
(எ-டு.) நிலனெனா நீரெனா இரண்டும், நிலனென்றா நீரென்றா
இரண்டும், நிலம் நீரென இரண்டும், நிலனே நீரேயென இரண்டும் என
வரும்.
இறுதியும் என்றது, அவ்வெண்ணுக்கண் இறுதி தொகை பெறும்,
என்றற்கு. பெயர்க்குரி மரபின் என்றது, மற்றைய எல்லாம் இடைச்
சொல்; செவ்வெண்ணுப் பெயர் தம்மானே ஆம் என்றற்கு. (42)
உம்மை எண்ணின் உருபு தொகுதல்
293.
இஃது, உம்மையும் உருபும் தொக்கவழியும் உருபுதொகை எனப்படும்
என வழு அமைத்தது.
(இ-ள்.)
உம்மை எண்ணின்-உம்மையான் வரும் எண்ணின்கண்,
உருபு தொகல் வரையார்-இரண்டாவதும் ஏழாவதும் தொக்கு நிற்றலை
நீக்கார் ஆசிரியர், எ-று.
உம்மை எண எனப் பொதுப்படக் கூறுதலின், உம்மை தொக்குழியும்
விரிந்துழியும் உருபு தொகுதல் கொள்க.
(எ-டு.) புலிவிற்கெண்டை, யானைதேர்குதிரை காலாள் என்னும் பல
பெயர் உம்மைத் தொகைகள் ஒருசொல் நடையவாய்க் கிடந்தன
வந்தன என்னுந் தம் வினையாகிய பயனிலைகளைக்
கொள்ளும்வழியும், புலியும் வில்லுங் கொண்டையுங் கிடந்தன,
யானையுந் தேருங் குதிரையுங் காலாளும் வந்தன, என உம்மை
விரிந்து நின்ற பொருளைத் தந்தே நிற்குமாறு போல இவ்வும்மைத்
தொகைகள், புலிவிற்கெண்டையை வைத்தான், யானை தேர் குதிரை
காலாளை எறிந்தான், என உருபு ஏற்று நின்றவழியும், புலியும் வில்லுங்
கெண்டையும் வைத்தான், யானையுந் தேருங் குதிரையு காலாளும்
எறிந்தான் என உம்மை விரிந்து நின்ற பொருளைத்

