தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

Tholkappiyam-nachinarkinyam

நச்சினார்க்கினியர் உரை - சொல்லதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   729


 

உரியியல்
 

உரிச்சொற்குப் பொதுஇலக்கணம்
 

299.
 

உரிச்சொற் கிளவி விரிக்குங் காலை
இசையினுங் குறிப்பினும் பண்பினுந் தோன்றிப்
பெயரினும் வினையினும் மெய்தடு மாறி

ஒருசொற் பலபொருட் குரிமை தோன்றினும்
பலசொல் ஒருபொருட் குரிமை தோன்றினும்
பயிலா தவற்றைப் பயின்றவை சார்த்தித்
தத்தம் மரபிற் சென்றுநில மருங்கின்
எச்சொல் லாயினும் பொருள்வேறு கிளத்தல்.
 

என்பது     சூத்திரம்.     இது,  தமக்கு இயல்பில்லா இடைச்சொற்
போலாது,   இசை    குறிப்புப்  பண்பென்னும்  பொருட்கு  உரியவாய் வருதலின், உரிச்சொல் எனப்பட்டது.   உரிச்சொல் இலக்கணம் உணர்த்தினமையான் இவ்வோத்து ‘உரிச்சொல் ஓத்து’ என்னும் பெயர்த்தாயிற்று. ஈறுபற்றிப் பலபொருள்     விளக்கலும்      உருபேற்றலும்   இன்றிப் பெயரையும் வினையையுஞ்  சார்ந்து   பொருட்குணத்தை  விளக்கலின்,
உரிச்சொல், பெயரின்    வேறென்று         உணர்க.   இச்சூத்திரம்,
உரிச்சொற்கெல்லாம் பொது இலக்கணங் கூறுகின்றது.
 

    உரிச்சொற்கிளவி  விரிக்குங்காலை - உரிச்சொல்லாகிய
சொல்லை விரித்து  உணர்த்துமிடத்து, ஒருசொற் பல பொருட்கு உரிமை
தோன்றினும்   பலசொல்  ஒருபொருட்கு உரிமை தோன்றினும் - அஃது
ஒருசொல் ஒருபொருட்கு  உரித்தாய் வாராது பல பொருட்கு உரித்தாய்
மயங்கிவரினும்  பலசொல்  ஒருபொருட்கு  உரியவாய்  மயங்கிவரினும்,
இசையினுங்  குறிப்பினும்  பண்பினும் தோன்றிப் பெயரினும் வினயினும்
மெய்தடுமாறித்   தத்தம்    மரபிற்   சென்று  நிலைமருங்கின்-இசைப்
பொருண்மைக்கண்ணும்      மனத்தாற்      குறித்து       உணரும்
பொருண்மைக்கண்ணும்     பண்புப்          பொருண்மைக்கண்ணும்
வெளிப்பட்டுப்    பெயர்     வினைகள்    போன்றும்    அவற்றிற்கு
முதல்நிலையாயும் தம்  உருவு தடுமாறித் தத்தமக்கு உரிய முறைமையாற்
சென்று     நிற்கும்      நிலைக்களங்களானே,     எச்சொல்லாயினும்
பயிலாதவற்றைப்     பயின்றவை     சார்த்திப்    பொருள்    வேறு
கிளத்தல்-கேட்போனாற் பொருளுணரப்படாத எவ்வ

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 08-09-2016 18:01:00(இந்திய நேரம்)