Primary tabs

(அகம். 198:3) எனவும், ‘பேரிசை நவிரம் மேஎய் உறையும், காரி
யுண்டிக்கடவுள்’ (மலைபடு. 82, 83) எனவும் வரும். (31)
ஓய்தல், ஆய்தல், நிழத்தல், சாஅய்: பொருள்
330.
ஓய்தல் ஆய்தல் நிழத்தல் சாஅய்
ஆவயின் நான்கும் உள்ளதன் நுணுக்கம்.
இதுவும் அது.
(இ-ள்.)
ஓய்தல், ஆய்தல், நிழத்தல், சாஅய் ஆவயின் நான்கும்-
ஓய்தல், ஆய்தல், நிழத்தல், சாஅய் என்னும் உரிச்சொல்
முதனிலையாகிய அவ்விடத்து வந்த குறிப்புப் பெயர் நான்கும்,
உள்ளதன் நுணுக்கம்-பண்டு உள்ளது ஒன்றனது நுணுகுதலை
உணர்த்தும், எ-று.
சாய்தல் விகாரப்பட்டது.
(எ-டு.)
‘வேனில் உழந்த வறிதுயங் கோய்களிறு’ (கலி.7:1)
‘பாய்ந்தாய்ந்த தானைப் பரிந்தானா மைந்தினை’ (கலி.6:2) ‘நிழத்த
யானை மேய்புலம் படர’ (மதுரைக்.303) ‘கயலறல் எதிரக் கடும்புனல்
சாஅய்’ (நெடுநல்.18) என வரும். ஆய்ந்த தானை என்றது, பொங்குதல்
அவிதலான் நொசிந்த துகில் என்றவாறு. (32)
புலம்பு என்பதன் பொருள்
331. புலம்பே தனிமை.
இதுவும் அது.
(இ-ள்.) புலம்பே தனிமை
- புலம்பு தனிமை என்னுங் குறிப்பு
உணர்த்தும், எ-று.
(எ-டு.)
‘புலிப்பல் கோத்த புலம்புமணித் தாலி’
(அகம். 7:18) என
வரும். தமி என்பத சொல் புறனடையாற் (389) கொள்க. (33)
துவன்று என்பதன் பொருள்
332. துவன்றுநிறை வாகும்.
இதுவும் அது.
(இ-ள்)
துவன்று நிறைவு ஆகும்-துவன்று நிறைவு என்னுங்
குறிப்பு
உணர்த்தும், எ-று.
(எ-டு.)
‘ஆரியர் துவன்றிய பேரிசை இமயம்’ (பதிற்.11:23) என
வரும்.(34)
முரஞ்சல் என்பதன் பொருள்
333.
இதுவும் அது.
(இ-ள்.)
முரஞ்சல் முதிர்வே - முரஞ்சல் முதிர்வு என்னுங்
குறிப்பு உணர்த்தும், எ-று.
(எ-டு.) ‘கோடுபல முரஞ்சிய கோளி ஆலத்து’ (மலைபடு.268)
என வரும். (35)
வெம்மை என்பதன் பொருள்
334.
இது பண்பு.
(இ-ள்.)
வெம்மை வேண்டல்-வெம்மை விரும்புதலாகிய
பண்பை
உணர்த்தும், எ-று.
(எ-டு.) ‘எம்வெங் காமம் இயைவ தாயின்’ (அகம். 15:1) என வரும்.
இது ‘குழைமாண் ஒள்ளிழை நீவெய் யோளொடு’ (அகம்.) எனத்
திரிந்தும் நிற்கும். வெம்மை வெப்பம் உணர்த்துதல் வழக்கு. (36)
பொற்பு என்பதன் பொருள்
335.
இது குறிப்பு,
(இ-ள்.)
பொற்பே பொலிவு-பொற்புப் பொலிவு என்னுங் குறிப்பு
உணர்த்தும், எ-று.
(எ-டு.) ‘பெருவரை அடுக்கம்
பொற்பச் சூர்மகள்’ (நற்.34) என
வரும். (37)

