தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

Tholkappiyam-nachinarkinyam

நச்சினார்க்கினியர் உரை - சொல்லதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   738


(அகம்.1:8) என   வரும்.   இப்பணை   மூங்கிலினை   உணர்த்தல்
உரிச்சொல் அன்மை உணர்க. (41) 

(பாடம்)1 முள்காது, 2பணைத்த 

படர் என்பதன் பொருள்

340. படரே உள்ளல் செலவும் ஆகும். 

இதுவும் அது.  

(இ-ள்.)  படரே உள்ளல் செலவும் ஆகும் - படர் உள்ளுதல்
என்னுங்  குறிப்பு  உணர்த்துதலே  அன்றிச் செலவு என்னுங் குறிப்பும்
உணர்த்தும், எ-று. 

உள்ளல்,   வருத்தக் குறிப்பான் உள்ளுதலும் வருத்தக் குறிப்பின்றி
உள்ளுதலும்  என  இருவகைத்து  ஆகலின்,  செலவுப் பொருட்டாகிய
படரும் இவ்விரு வகையும் உடைத்து. 

(எ-டு.)      ‘வள்ளியோர்ப் படர்குவர் புலவர் யானும்’ (புறம்.154:5)
‘பசந்த  மேனியொடு  படரட  வருந்தி’  (புறம். 159:6) எனவும், ‘கறவை
கன்றுவயின் படர’ (குறுந். 108) எனவும் வரும். (42) 

பையுள், சிறுமை என்பவற்றின் பொருள்

341. பையுளுஞ், சிறுமையும் நோயின் பொருள. 

இதுவும் அது. 

(இ-ள்.) பையுளுஞ்   சிறுமையும்   நோயின்   பொருள-பையுளுஞ்
சிறுமையும் நோயாகிய குறிப்பு உணர்த்தும், எ-று. 

(எ-டு.) ‘பையுள் மாலைப்  பழுமரம்  படரிய’  (குறுந்.195)  ‘சிறுமை
உறுபவோ *செய்பறி யலரே’ (நற்.1) என வரும். (43) 

*(பாடம்) உறுப

எய்யாமை என்பதன் பொருள்

342. எய்யா மையே அறியா மையே 

இதுவும் அது. 

(இ-ள்.) எய்யாமையே அறியாமையே-  எய்யாமை  அறியாமையாகிய
குறிப்பு உணர்த்தும், எ-று. 

(எ-டு.) ‘எய்யா மையலை நீயும் வருந்துதி’ (குறிஞ்சிப்.8) என வரும்.

அறிதல் என்னும் உடம்பாட்டிற்கு மறையாகிய அறியாமை என்னும்
உரிச்சொல்லான்  எய்யாமையை உணர்த்தவே, அவ்வெய்யாமை மறைச்
சொல்  என்பதூஉம்,  அதற்கு எய்த்தல் என்னும் உடம்பாட்டுச் சொல்
உளது  என்பதூஉம்  பெற்றாம்.  அவ்வுடம்பாட்டை  ஓதாது மறையை
ஓதினார்,  மறைச்சொல்லும்  உரிச்சொல்லாய் வரும் என்றற்கு. ‘எய்த்து
நீர்ச்சிலம்  பின்குரை  மேகலை, (சீவக.2481) என்புழி, எய்த்து என்பது
அறிந்து என்னும் பொருள் உணர்த்திற்று. (44) 

நன்று என்பதன் பொருள்  

343. நன்றுபெரி தாகும். 

இதுவும் அது. 

(இ-ள்.) நன்று பெரிது  ஆகும்-நன்று  பெரிது  என்னுங்  குறிப்பு
உணர்த்தும், எ-று. 

(எ-டு.) ‘நன்றும் அரிதுற்றனையாற்  பெரும!’  (அகம்.  10:6,7) என
வரும். 

பெருமை என்னாது    பெரிது   என்றதனான்,   நன்று   என்பது
வினையெச்சம் ஆயிற்று. (45) 

தா என்பதன் பொருள்

344. தாவே வலியும் வருத்தமும் ஆகும். 

இதுவும் அது. 

(இ-ள்.)
  

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 08-09-2016 18:02:41(இந்திய நேரம்)