தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

Tholkappiyam-nachinarkinyam

நச்சினார்க்கினியர் உரை - சொல்லதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   739


தாவே வலியும் வருத்தமும் ஆகும்- தா வலியும் வருத்தமும் ஆகிய
குறிப்பு உணர்த்தும், எ-று. 

(எ-டு.) ‘தாவில் நன்பொன தைஇய பாவை’  (அகம்.212:1)  ‘தாவாக்
கொள்கைத்  தகைசால்  சிறப்பின்’  என  வரும்.  தாவாக்  கொள்கை,
வருத்தம் இல்லாத விரதம். 

இனி, 

‘கருங்கண்     தாக்கலை பெரும்பிறி துற்றென’ (குறுந். 69) எனத்
தாவுதலும்,  ‘தாவாத  இல்லை  வலிகளும்’ எனக் கேடும் உணர்த்துதல்
‘கூறிய கிளவி’ (390) என்பதனாற் கொள்க. (46) 

தெவு என்பதன் பொருள் 

345. தெவுக்கொளற் பொருட்டே. 

இதுவும் அது. 

(இ-ள்.) தெவு கொளல் பொருட்டே -தெவு கொள்ளுதலாகிய குறிப்பு
உணர்த்தும், எ-று. 

(எ-டு.) ‘நீர்த் தெவு நிரைத்தொழுவர்’ (மதுரைக்.89) என வரும். (47)

தெவ்வு என்பதன் பொருள்

346. தெவ்வுப்பகை ஆகும். 

இதுவும் அது. 

(இ-ள்.)   தெவ்  ஆகும்   -   தெவ்வு   பகையாகிய    குறிப்பு
உணர்த்தும், எ-று. 

(எ-டு.) ‘தெவ்வுப்புலஞ் சிதைய வெய்கணை சிதறி’ என வரும். (48) 

விறப்பு, உறப்பு, வெறுப்பு என்பவற்றின் பொருள்

347. விறப்பும் உறப்பும் வெறுப்புஞ் செறிவே. 

இதுவும் அது. 

(இ-ள்) விறப்பும் உறப்பும் வெறுப்புஞ்  செறிவே-விறப்பும் உறப்பும்
வெறுப்புஞ் செறிவு என்னுங் குறிப்பு உணர்த்தும், எ-று. 

(எ-டு.)  ‘விறந்த காப்போ டுண்ணின்று வலியுறுத்து’ ‘உறந்த இஞ்சி
உயர்நிலை   மாடத்து’   ‘வெறுத்த  கேள்வி  விளங்குபுகழ்க்  கபிலன்’
(புறம்.53:2) என வரும். (49) 

விறப்பு அச்சமும் உணர்த்தல் 

348. அவற்றுள்,
விறப்பே வெரூஉப் பொருட்டும் ஆகும். 

இஃது எய்தியதன்மேல் சிறப்புவிதி கூறுகின்றது. 

(இ-ள்.)     அவற்றுள் விறப்பே வெரூஉப் பொருட்டும் ஆகும் -
அம்மூன்றனுள்   விறப்புச்   செறிவே  அன்றி  வெருவுதற்  குறிப்பும்
உணர்த்தும், எ-று. 

(எ-டு.) ‘அவலெறி உலக்கைப் பாடுவிறந் தயல’ (பெரும்பாண். 226)
என வரும். (50) 

கம்பலை, சும்மை, கலி, அழுங்கல் : பொருள்

349. கம்பலை சும்மை கலியே அழுங்கல்
என்றிவை நான்கும் அரவப் பொருள. 

இஃது இசை. 

(இ-ள்.) கம்பலை சும்மை கலியே அழுங்கல் என்று இவை நான்கும்
அரவப்பொருள-கம்பலை,    சும்மை,    கலி,    அழுங்கல்   என்று
சொல்லப்பட்ட  இந்நான்கும்  அரவமாகிய  இசைப்  பொருண்மையை
உணர்த்தும், எ-று. 

(எ-டு.)     ‘களிறுகவர் கம்பலை போல’ (அகம். 96:17) ‘தளிமழை
பொழியும்  தண்பரங்  குன்றில்,  கலிகொள் சும்மை ஒலிகொள் ஆயம்’
(மதுரைக். 263-4) ‘கலிகொள் ஆயம் மலிபுதொகுபு எடுத்த’ (அகம்.11:4).
‘உயவுப்புணர்ந் தன்றிவ் வழுங்கல் ஊரே’ (நற். 203) என வரும்.

‘கலிகொள் சும்மை’ (மதுரைக். 264) என்பதனுள் கலி செருக்கினை
  

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 08-09-2016 18:02:53(இந்திய நேரம்)