Primary tabs

என வரும்.
(81)
* (பாடம்) வித்தொடு சென் வட்டி பற்பல
அமர்தல் என்பதன் பொருள்
380. அமர்தல் மேவல்.
இதுவும் அது.
(இ-ள்.)
அமர்தல் மேவல் - அமர்தல் மேவுதலாகிய குறிப்பு
உணர்த்தும், எ-று.
(எ-டு.) ‘அகனமர்ந்து செய்யாள் உறையும்’ (குறள். 84) என வரும்.
(82)
யாண் என்பதன் பொருள்
381. யாணுக்கவின் ஆகும்.
இதுவும் அது.
(இ-ள்.) யாணுக்கவின்
ஆகும் -யாண் என்னுஞ் சொல்
கவினாகிய குறிப்பு உணர்த்தும், எ-று.
(எ-டு.) ‘யாணது பசலை என்றனன்’ (நற்.50) எனவ வரும். (83)
பரவு, பழிச்சு என்பவற்றின் பொருள்
382. பரவும் பழிச்சும் வழுத்தின் பொருள.
இதுவும் அது,
(இ-ள்)
பரவும் பழிச்சும் வழுத்தின் பொருள - பரவும் பழிச்சும்
வழுத்துதல் என்னும் சொல்லினது குறிப்புப்பொருளை உடையது, எ-று.
(எ-டு.) ‘கல்லே பரவின் அல்லது, நெல்லுகுத்துப் பரவும் கடவுளும்
இலவே’ (புறம்.335: 11,12) ‘செறிவளை விறலியர் கைதொழூஉப் பழிச்சி,
வறிதுநெறி ஒரீஇ’ என வரும். (84)
கடி என்பதன் பொருள்
383.
கடியென் கிளவி
வரைவே கூர்மை காப்பே புதுமை
விரைவே விளக்கம் மிகுதி சிறப்பே
அச்சம் முன்தேற் றாயீ ரைந்தும்
மெய்ப்படத் தோன்றும் பொருட்டா கும்மே.
இது, பெரும்பான்மை குறிப்புஞ் சிறுபான்மை பண்பும் உணர்த்து
கின்றது.
(இ-ள்.) கடிஎன் கிளவி வரைவே கூர்மை காப்பே புதுமை விரைவே
விளக்கம் மிகுதி சிறப்பே அச்சம் முன்தேற்று
ஆயீரைந்தும்
மெய்ப்படத் தோன்றும் பொருட்டு ஆகும்மே- கடி என்னும்
சொல்
வரைவு, கூர்மை, காப்பு, புதுமை, விரைவு, விளக்கம், மிகுதி,
சிறப்பு,
அச்சம், தெய்வம் முதலியவற்றின் முன் நின்று தெளிவித்தல்
என்று
கூறப்படுகின்ற அப்பத்துச் சொல்லும் மெய்ம்மைப்படத் தோன்றும்
பொருண்மையினை உடைத்து, எ-று.
(எ-டு.) ‘கடிந்த கடிந்தொரார் செய்தார்க்கு’ (குறள்.658) ‘கடிநுனைப்
பகழி’ ‘கடி மரம் தடியும் ஓசை’ (புறம்.36:9) ‘கடியுண் கடவுட் கிட்ட
செழுங்குரல்’* (குறுந்.105) ‘கடுந்தேர்
குழித்த ஞெள்ள லாங்கண்’
(புறம்.15:1) ‘கடும்பகல் ஞாயிறு’ (கலி.145:26) ‘கடுங்கால் ஒற்றலின்
சுடர்சிறந் துருத்து’ (பதிற்.25) ‘அம்பு துஞ்சும் கடியரணால்’ (புறம்.20)
‘கடியுருமின் உரறிக் கடிப்புச் சேர்பு, கடிய மன்றநின் தழங்குகுரல்
முரசம்’

