Primary tabs

ளானே தம்முடைய எஞ்சு பொருளைத் தாமே கூறி நிற்கும், எ-று.
(எ-டு.) ‘கற்கறிக்க
நன்கு அட்டான்,’ என்றால், ‘தீங்கு அட்டான்,’
என்னுங் குறிப்பு, தோன்றிய எஞ்சு பொருளினைத் தானே கூறி நின்றது.
‘வயிறு மொடுமொடுத்தது,’ என்றால்,
இசையிற் குறிப்பாகிய ‘உண்ண
வேண்டா,’ என்னும் எஞ்சு
பொருளைத் தானே கூறி நின்றது.
இவ்விசையிற் குறிப்பு வயிற்றின்கண்ணும் கொள்க.
இனி,
பிற சொல் வாராது
தம்மைத்தாமே முடிக்கும் என்று,
‘விண்ணென விணைத்தது, ஒல்லென ஒலித்தது,’
என்பன காட்டினாரால்
உரையாசிரியர் எனின், அவை
தம்மைத் தாமே முடியாமல், ‘அது
விண்ணென வீங்கிற்று, ஒல்லென
ஓடிற்று,’ எனப் பிறசொல் வந்து
முடித்தலும் அவற்றிற்கு
ஏற்குமாகலானும், அவை என
என்னும்
இடைச்சொல்லாகலானும், அவற்றைக்
கொண்டால், ‘காரெனக் கறுத்தது,’
என்னும் பண்பும் கோடல் வேண்டுமாகலானும் அது
போலி உரையாம்.
இனி,
சேனாவரையர் குறிப்பெச்சத்திற்கு ‘இளைதாக
முண்மரம்
கொல்க’ (குறள்.879) என்னுங் குறள் வெண்பாவும், இசையெச்சத்திற்கு
‘அகர முதல’ (குறள்.1)
என்னுங் குறள் வெண்பாவும்
காட்டினாராலெனின், அவர் காட்டின குறிப்பெச்சஞ் செய்யுளிலக்கணங்
கூறுகின்ற செய்யுளியற் ‘சொல்லொடும் குறிப்பொடும்’ (206)
என்னுஞ்
சூத்திரத்தான் பல சொல் தொடர்ந்ததொரு
செய்யுள் முடிந்தக்கால்
வரும் என்று கொண்ட
குறிப்பெச்சமாகலின், அதனைச்
சொல்லிலக்கணத்திற் கூறுகின்ற
குறிப்பெச்சத்திற்குக் காட்டினால்
ஆண்டைக் குறிப்பெச்சத்திற்கு வேறு
பொருள் இன்றாமாகலானும்,
அவர் இசையெச்சம் என்ற ‘அகர முதல’
(குறள்.1) என்பதன்கண்
‘அதுபோல’ என விரிந்த உவமச்சொல்
ஒன்றற்குத் துணியுமாறு
விரியாது, இரண்டற்கும் பொதுவாய்
வேறுபட வந்த உவமத்தின்
பாற்படுதல் அல்லது இசையா

