Primary tabs

ற் பிறவாமையானும் அவை பொருந்தாமை உணர்க. (44)
சொல்லெச்சத்திற்கு முடிபு
441.
சொல்என் எச்சம் முன்னும் பின்னும்
சொல்லளா வல்ல தெஞ்சுதல் இன்றே.
இது, சொல்லெச்சத்திற்கு முடிபு கூறுகின்றது.
(இ-ள்.) என் எச்சம் - என்
என்கின்ற எச்சமானது, சொல் அளவு
அல்லது-சொல் என்னும் முதனிலை மாத்திரை தன்னுள்ளேயே எஞ்சி
நிற்றல் அல்லது, சொல் முன்னும் பின்னும் எஞ்சுதலின்று-செய்யுளியலிற்
கூறுஞ் சொல்எச்சம்போல ஒரு சொல் செய்யுட்கு
முன்னும் பின்னும்
எஞ்சி நிற்றல் இல்லை, எ-று.
என் என்னும் இடைச்சொற்கண்ணே
சொல் என்பது தோன்றுதலின்.
‘என் எச்சம்’ என்றார். என்
என்பது சொல்லை ஒழிபாக நிற்றலின்,
முன்னர்ச் ‘சொல் எச்சம்’ என்றார்.
‘வினையெனப் படுவது’ என்றது,
‘வினையென்று சொல்லப்படுவது’ என்று
பொருள் தந்த இடத்து என்
என்னும் எச்சம்தான் அவாவுதலின், இடையே நின்ற ‘சொல்’ என்னும்
முதனிலைக்குத் தன் ஈற்றில் நின்ற செயவெனெச்சத்தை உணர்த்தும்
அகரத்தை ஏற்பித்து நின்றவாறு காண்க. ‘நளியென் கிளவி’ (323)
என்றது, ‘நளியென்று சொல்லுஞ் சொல்’ என்று பொருள்தந்த இடத்தும்
என் என்னும் எச்சம் தான் அவாவுதலின், இடைநின்ற சொல் என்னும்
முதனிலைக்குத் தன் ஈற்றில் நிற்கும்
செய்யும் என்னும் எச்சத்தை
உணர்த்தும் உம் என்பதனை ஏற்பித்து நின்றவாறு காண்க. ‘தாவென
நின்றான்,’ என்பது, ‘தாவென்று சொல்லி
நின்றான்,’ என எனவென்
எச்சம் சொல்லி என்னும் வினைகொண்டு நின்றது. இது சொல்லெச்சம்
அன்று. இங்ஙனம் எச்ச ஈறுகளை ஏற்றலின், சொல் என்பது முதனிலை
ஆயிற்று. என் என்பதற்கும் சொல்
என்பதற்கும் இடைநின்ற றகர
உகரம் அவ்விரண்டனையுங் கூட்டுதற்கு வந்து நின்றது. ‘எழுத்

