தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tholkappiyam-nachinarkinyam

நச்சினார்க்கினியர் உரை - சொல்லதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   797


முன்னிலை  உணர்த்தி  நிற்குமேல்,  ‘உண்டான், உண்டேன் என உண்
என்னும்   முதனிலையின்     விரிந்துநின்ற    ஈற்றான்   உணர்த்தும்
படர்க்கைக்குந் தன்மைக்கும் வழுவாமாறு காண்க. (54) 

ஈ ஏ என்பன நிலை வேறுபடுமாறு

451. முன்னிலை முன்னர் ஈயும் ஏயும
அந்நிலை மரபின் மெய்யூர்ந்து வருமே.
 

இது,  பொருள்  தரும் இடைச்சொற்களுள் சில நிலை வேறுபடுமாறு
கூறுகின்றது. 

(இ-ள்.) முன்னிலை  முன்னர்  ஈயும்   ஏயும்-முன்னிலை  வினைச்
சொல்  முன்  வரும்  ஈகாரமும்  ஏகாரமும்,  அந்நிலை மரபின் மெய்
ஊர்ந்து  வருமே - அம்  முன்னிலைச் சொற்கண் தாம் நிற்றற்கு உரிய
முறைமையை உடைய மெய்களை ஊர்ந்து வரும், எ-று. 

முன்னிலைச்  சொல்லாவன,  ‘செல்,  நில்,  புகு, உண், தின், உரை
என்றாற் போல வருவனவாம். 

(எ-டு.) ‘சென்றீ பெரும!நிற் றகைக்குநர் யாரோ.’

(அகம்.46:16)

‘அட்டில் ஓலை தொட்டனை நின்மே.’

(நற்.300)

என வரும். இவற்றுள் ஈகாரம், ‘புக்கீ, உண்டீ,  உரைத்தீ, சென்றீ’ எனக்
கடதறவை  ஊர்ந்துவரும்  என்பது  தோன்ற, ‘அந்நிலை மரபின் மெய்’
என்றார். ஏகாரம்  மகரம் ஊர்ந்துவரும். இவை நிலைமொழி வருமொழி
செய்து  புணர்க்கப்படாமையின்,  புணர்ச்சி  விகாரமின்றி, முன்னிலைச்
சொல் விகாரமாயின. 

உண்பாய்  என்பதற்கு  மறையாகிய  உண்ணாய்  என்னுஞ்  சொல்,
படுத்த  லோசையான்   ‘உண்டலைச்  செய்,’  என்னும்  பொருள்தந்து
நிற்றலிற்,  ‘செய்  யென்  கிளவி ஆகிடன் உடைத்து.’ என்று சூத்திரஞ்
செய்ததன்   பின்னர்,  ‘செல்லுதலைச்  செய்;  நிற்றலைச்  செய்,’  என
இச்சூத்திரத்தின்  முதனிலைகளும்  செய்   என்னும்  வாசகத்தினையே
உணர்த்தி  நிற்கும்  என்பது  கருதி,  ‘செய்  யென்  கிளவி  ஆகிடன்
உடைத்தே.’ என்றதன்பின் இதனை வைத்தார்.(55) 

புதியன புகுதல்

452. கடிசொல் இல்லைக் காலத்துப் படினே. 

இது  காலந்தோறும்  புதியவாகத்  தோன்றிய  சொற்களுங் கொள்க
என்கின்றது. 

(இ-ள்.) கடிசொல்  இல்லை -  ‘இவை   தொன்றுதொட்டு  வந்தன
அல்ல,’  என்று  கடியப்படும்  சொற்கள்  இல்லை, காலத்துப் படினே -
அவ்வக்காலத்துத் தோன்றி நன்மக்கள் வழக்கினுள்ளும் செய்யுளுள்ளும்
வழங்கப்பட்டு வருமா
   

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 08-09-2016 18:13:49(இந்திய நேரம்)