Primary tabs

ஆவணியும் புரட்டாசியும் ஆதலின், அவை வெப்பமுந் தட்பமும்
மிகாது இடை நிகரவாகி ஏவல் செய்துவரும் இளையோர்க்கு நீரும்
நிழலும் பயத்தலானும், ஆர்பதம் மிக்கு நீரும் நிழலும் பெறுதலிற்
களிசிறந்து, மாவும் புள்ளுந் துணையோ டின்புற்று விளையாடுவன
கண்டு தலைவற்குந் தலைவிக்குங் காமம் குறிப்பு மிகுதலானுமென்பது.
புல்லை மேய்ந்து கொல்லேற்றொடு புனிற்றாக் கன்றை நினைந்து
மன்றிற் புகுதரவும் தீங்குழ லிசைப்பவும் பந்தர்முல்லை வந்து
மணங்கஞற்றவும் வருகின்ற தலைவற்கும் இருந்த தலைவிக்குங்
காமக்குறிப்புச் சிறத்தலின், அக்காலத்து மாலைப்பொழுதும்
உரித்தாயிற்று.
இனிக் குறிஞ்சியாவது
புணர்தற்பொருட்டு. அஃது இயற்கைப்
புணர்ச்சி முதலியனவாம். இயற்கைப் புணர்ச்சி நிகழ்ந்த பின் களவு
நீட்டிப்பக் கருதுந் தலைவற்குக் களவினைச் சிறப்பிக்குங்கால், தலைவி
அரியளாக வேண்டுமாகவே அவ்வருமையை ஆக்குவது
ஐப்பசியுங்கார்த்திகையுமாகிய கூதிரும் அதன் இடையாமமு மென்பது.
என்னை? இருள்தூங்கித் துளி மிகுதலிற் சேறல் அரிதாதலானும்,
பானாட் கங்குலிற் பரந்துடன் வழங்காது மாவும் புள்ளுங் துணையுடன்
இன்புற்று வதிதலிற் காமக்குறிப்புக் கழியவே பெருகுதலானுங், காவன்
மிகுதி நோக்காது வருந் தலைவனைக் குறிக்கண்
எதிர்ப்பட்டுப்
புணருங்கால் இன்பம் பெருகுதலின், இந்நிலத்திற்குக் கூதிர்காலஞ்
சிறந்ததெனப்படும்.
உ-ம்:
‘‘விருந்தின் மன்ன ரருங்கலந் தெறுப்ப
வேந்தனும் வெம்பகை தணிந்தனன் றீம்பெயற்
காரு மார்கலி தலையின்று தேரும்
ஓவத் தன்ன கோபச் செந்நிலம்
வள்வாய் ஆழி உள்ளுறு புருளக்
கடவுக காண்குவம் பாக மதவுடைத்
தாம்பசை குழவி வீங்குசுரை மடியக்
கனையலங் குரல காற்பரி பயிற்றிப்
படுமணி மிடற்ற பயநிரை யாயங்
கொடுமடி யுடையர் கோற்கைக் கோவலர்
கொன்றையங் குழலர் பின்றைத் தூங்க
மணமனைப் படரும் நனைநகு மாயுலைத்
தனக்கென வாழாப் பிறர்க்குரி யாளன்
பண்ணன் சிறுகுடிப் படப்பை நுண்ணிலைப்
புன்காழ் நெல்லிப் பைங்காய் தின்றவர்
நீர்குடி சுவையிற் றீவிய மிழற்றி
முகிழ்நிலாத் திகழ்தரு மூவாத்