தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

Tholkappiyam-nachinarkinyam

நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   2277


எற்பாடு  நெய்தல்  ஆதல்  மெய்பெறத்  தோன்றும்  - எற்படுகாலம்
நெய்தலாதலும் பொருள் பெறத் தோன்றும் எ-று.

வைகுறுதலும்     விடியலும்  என்னும்  உம்மை  தொக்கு நின்றது.
செவியறிவுறுத்தலைச்  செவியறிவுறூஉ  என்றாற்  போல வைகுறுதலை
வைகுறு  என்றார். அது மாலையாமமும் இடையாமமுங்  கழியுந்துணை
அக்கங்குல்  வைகுறுதல்.  அது  கங்குல்  வைகிய அறுதியாதனோக்கி
வைகறை  யெனவுங்  கூறுப. அதுவும் பாடம். நாள் வெயிற் காலையை
விடியலென்றார்.  ‘‘விடியல்  வெங்கதிர்  காயும் வேயம லகலறை’’
(கலி.45)  என்ப.
விடியல் வைகறை யிடூஉ மூர’ (அகம்.196) என்றது,
விடியற்கு  முன்னர்த்தாகிய  வைகறை  என உருபுதொக்கு முன்மொழி
நிலையலாயிற்று.  பரத்தையின் பிரிந்த  தலைவவன் ஆடலும் பாடலுங்
கண்டுங்கேட்டும் பொழுகழிப்பிப் பிறர்க்குப் புலனாகாமல் மீளுங்காலம்
அதுவாதலானுந்,  தலைவிக்குக்  கங்கல்  யாமம் கழியாது நெஞ்சழிந்து
ஆற்றாமை  மிகுதலான்  ஊடல்  உணர்த்தற்கு எளிதாவதோர் உபகார
முடைத்தாதலானும்     வைகறை    கூறினார்.    இனித்    தலைவி
விடியற்குக்காலஞ்   சிறுவரைத்தாதலின்   இதனாற்   பெறும்   பயன்
இன்றென  முனிந்து  வாயிலடைத்து  ஊடனீட்டிப்பவே அவ்வைகறை
வழித்தோன்றிய  விடியற்கண்ணும்  அவன்  மெய்வேறுபாடு விளங்கக்
கண்டு வாயில் புகுத்தல் பயத்தலின் விடியல் கூறினார்.

‘‘வீங்குநீர்’’ என்னும் மருதக்கலியுள்,

‘‘அணைமென்றோள் யாம்வாட அமர்துணைப் புணர்ந்துநீ
மணமனையா யெனவந்த மல்லலின் மாண்பன்றோ
பொதுக்கொண்ட கௌவையிற் பூவணிப் பொலிந்தநின்
வதுவையங் கமழ்நாற்றம் வைகறைப் பெற்றதை.’’ (கலி.66)

என மருதத்திற்கு வைகறை வந்தது.

‘‘விரிகதிர் மண்டிலம்’’ என்னும் மருதக்கலியுள்,

‘‘தணந்தனை யெனக்கேட்டுத் தவறோரா தெமக்குநின்
குணங்களைப் பாராட்டுத் தோழன்வந் தீயான்கொல்
கணங்குழை நல்லவர் கதுப்பற லணைத்துஞ்சி
யணங்குபோற் கமழுநின் னலர்மார்பு காணிய.’’  (கலி.71)

என மருதத்துக் காலை வந்தது.

‘‘காலை யெழுந்து கடுந்தேர் பண்ணி’’         (குறுந்.45)

என்பதும் அது.

இனி வெஞ்சுடர் வெப்பந் தீரத்தண்ணறுஞ் சோலை தாழ்ந்து நிழற்
செய்யவுந்,  தண்பதம்பட்ட தெண்கழி மேய்ந்து பல்வேறு வகைப்பட்ட
புள்ளெல்லாங் குடம்பை நோக்கி உடங்கு பெயரவும், புன்னை முதலிய
பூவி
 

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 08-09-2016 22:53:03(இந்திய நேரம்)