தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

Tholkappiyam-nachinarkinyam

நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   2337


றுற்றனவு
மொள்ளிதழ் சோர்ந்தநின் கண்ணியு நல்லார்
சிரறுபு சீறச் சிவந்தநின் மார்புந்
தவறாதல் சாலாவோ கூறு;
அதுதக்கது, வேற்றுமை யெண்கண்ணோ வோராதி
                                      தீதின்மை

தேற்றக்கண் டீயாய் தெளிக்கு;
இனித் தேற்றேம்யாந்
தேர்மயங்கி வந்த தெரிகோதை யந்நல்லார்
தார்மயங்கி வந்த தவறஞ்சிப் போர்மயங்கி
நீகூறும் பொய்ச்சூ ளணங்காயின் மற்றினி
யார்மேல் விளியுமோ கூறு.’’                 (கலி.88)

இதனுள்   இரத்தலுந்   தெளித்தலும் வந்தவாறு  காண்க. பிறவும்
இவ்வாறு வருவன கொள்க.

உடன்போக்கின்கண் செவிலி முதலியோருங் கூற்று நிகழ்த்துதல்
 

42.
எஞ்சி யோர்க்கும் எஞ்சுதல் இலவே.
 

இது முன்னர்க் கூற்றிற்கு   உரியரெனக்  கூறாதோர்க்குங்  கூற்று
விதித்தலின் எய்தாத தெய்துவித்தது.

(இ-ள்.)  எஞ்சியோர்க்கும் - முன்னர்க் கூறாது நின்ற செவிலிக்குந்
தலைவிக்கும்  ஆயத்தோர்க்கும்  அயலோர்க்கும்;  எஞ்சுதல் இலவே
-கூற்றொழித லில எ-று.

செவிலிக்குக் கூற்று நிகழுமாறு:-

‘‘கிளியும் பந்துங் கழங்கும் வெய்யோள்
அளியும் அன்புஞ் சாயலும் இயல்பும்
முன்னாள் போலாள் இறீஇயரென் உயிரெனக்
கொடுந்தொடைக் குழவியொடு வயின்மரத் தியாத்த
கடுங்கட் கறவையிற் சிறுபுற நோக்கிக்
குறுக வந்து குவவுநுதல் நீவி
மெல்லெனத் தழீஇயினே னாக என்மகள்
நன்னர் ஆகத் திடைமுலை வியர்ப்பப்
பல்கால் முயங்கினள் மன்னே அன்னோ
விறன்மிகு நெடுந்தகை பலபா ராட்டி
வறனிழல் அசைஇ வான்புலந்து வருந்திய
மடமான் அசாவினந் திரங்குமரல் சுவைக்குங்
காடுடன் கழிதல் அறியின் தந்தை
அல்குபத மிகுத்த கடியுடை வியனகர்ச்
செல்வுழிச் செல்வுழி மெய்ந்நிழல் போலக்
கோதை யாயமோ டோரை தழீஇத்
தோடமை அரிச்சிலம் பொலிப்பஅவள்
ஆடுவழி ஆடுவழி அகலேன் மன்னே.’’      (அகம்.49)

இவ்   வகப்பாட்டு   உடன்போன தலைவியை நினைந்து செவிலி
மனையின்கண் மயங்கியது.

‘‘அத்த நீளிடை யவனொடு போகிய
முத்தேர் வெண்பன் முகிழ்நகை மடவர
றாய ரென்னும் பெயரே வல்லா
றெடுத்தேன் மன்ற யானே
கொடுத்தோர் மன்றவவ ளாயத் தோரே.’’  (ஐங்குறு.380)

இவ்     வைங்குறுநூறு  செவிலி   தெருட்டுவார்க்குக்   கூறியது.
முலைமுகஞ் செய்தன முள்ளெயி றிலங்கின’’ என்னும் அகப்பாட்டு (7)
மகட்போக்கிய   செவிலித்தாய்  சுரத்திடைப்  பின்  சென்று  நவ்விப்
பிணையைக்  கண்டு  சொற்றது.  செவிலி  கானவர்  மகளைக் கண்டு
கூறியதுமாம்.

‘‘காலே பரி
 

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 08-09-2016 23:04:17(இந்திய நேரம்)