தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

Tholkappiyam-nachinarkinyam

நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   2338


தப் பினவே கண்ணே
நோக்கி நோக்கி வாளிழந் தனவே
யகலிரு விசும்பின் மீனினும்
பலரே மன்றவிவ் வுலகத்துப் பிறரே.’’        (குறுந்.44)

இது    குறுந்தொகை.    செவிலி    கடத்திடைத்   தன்நெஞ்சிற்குச்
சொல்லியது.

‘‘இடிதுடிக் கம்பலையு மின்னாத வோசையு மிசையி னாராக்
கடுவினை யாளர் கடத்திடைப் பைங்குரவே கவன்று
                                       நின்றாய்

கொடுவினை மேற்செய்த வெம்மேபோ னீயும்
படுசினைப் பாவை பறித்துக்கோட் பட்டாயோ பையக்
                                       கூறாய்.’’

இது செவிலி குரவொடு புலம்பியது.

‘‘தான்றாயாக் கோங்கந் தளர்ந்து முலைகொடுப்ப
வீன்றாய்நீ பாவை யிருங்குரவே - யீன்றாண்
மொழிகாட்டா யாயினு முள்ளெயிற்றாள் சென்ற
வழிகாட்டா யீதென்று வந்து.’’       (திணைமாலை 65)

இது குரவே வழிகாட்டென்றது.

‘‘குடம்புகாக் கூவல் குடிகாக்குஞ் சின்னீ
ரிடம்பெறா மாதிரியு மேறாநீ ளத்த
முடம்புணர் காத லுவப்ப விறந்த
தடம்பெருங் கண்ணிக்கு யான்றாயர் கண்டீர்.’’

இது  நீ  யாரென்று  வினாயினார்க்குச் செவிலி கூறியது. இன்னும்
வேறுபட வருவனவெல்லாம் இதனான் அமைத்துக் கொள்க.

இனித் தலைவிகூற்று நிகழுமாறு:-

‘‘பைபயப் பசந்தன்று நுதலுஞ் சாஅய்
ஐதா கின்றென் தளிர்புரை மேனியும்
பலரும் அறியத் திகழ்தரும் அவலமும்
உயிர்கொண்டு கழியின் அல்லதை நினையின்
எவனோ வாழிதோழி பொரிகால்
பொகுட்டரை யிருப்பைக் குவிகுலைக் கழன்ற
வாலி யொப்பின் தூம்புடைத் திரள்வீ
ஆறுசெல் வம்பலர் நீளிடை யழுங்க
ஈனல் எண்கின் இருங்கிளை கவரும்
கரம்பல கடந்தோர்க் கிரங்குப வென்னார்
கௌவை மேவல ராகிஇவ்வூர்
நிரையப் பெண்டிர் இன்னா கூறுவ
புரைய அல்லஎன் மகட்கெனப் பரைஇ
நம்முணர்ந் தாறிய கொள்கை
யன்னை முன்னர்யாம் என்னிதற் படலே.’’    (அகம்.95)

இது போக்குடன்பட்டமை தலைவி தோழிக் குரைத்தது. அகம்.

‘‘அளிதோ தானே நாணே நம்மொடு
நனிநீ டுழந்தன்று மன்னே யினியே
வான்பூங் கரும்பி னோங்குமணற் சிறுசிறை
தீம்புன னெரிதர வீந்துக் காங்குத்
தாங்கு மளவை தாங்கிக்
காம நெரிதரக் கைநில் லாதே.’’            (குறுந்.149)

இக் குறுந்தொகை நாண் நீங்கினமை கூறியது.

‘‘சிலரும் பலருங் கடைக்க ணோக்கி
மூக்கி னுச்சிச் சுட்டுவிரல் சேர்த்தி
மறுகிற் பெண்டி ரம்ப றூற்றச்
சிறுகோல் வலத்த ளன்னை யலைப்ப
 

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 08-09-2016 23:04:28(இந்திய நேரம்)