Primary tabs

கொண்ட அசுவத்தாமாவின் போர்த்தொழில் போல்வன. தன்னரசன்
அறப்போரிடத்துப் படாது வஞ்சனையாற் படுதலின், அவனுக்குச்
சினஞ் சிறந்தது. இச்சிறப்பில்லாத தும்பையும் இக்கலியூழிக்கா
மென்பது ‘சென்று தலையழிக்குஞ் சிறப்பிற்று’ (தொல். பொ. புற. 15)
என்புழிக் கூறிற்று.
உ-ம்:
‘‘மறங்கெழு வேந்தன் குறங்கறுத் திட்டபி
னருமறை யாசா னொருமகன் வெகுண்டு
பாண்டவர் வேர்முதல் கீண்டெறி சீற்றமோ
டிரவூ ரறியாது துவரை வேந்தொடு
மாதுலன் றன்னை வாயிலி னிறீஇக்
காவல் பூட்டி யூர்ப்புறக் காவயி
னைவகை வேந்தரோ டரும்பெறற் றம்பியைக்
கைவயிற் கொண்டு கரியோன் காத்தலிற்
றொக்குடம் பிரீஇத் துறக்க மெய்திய
தந்தையைத் தலையற வெறிந்தவ னிவனெனத்
துஞ்சிடத் தெழீஇக் குஞ்சி பற்றி
வடாது பாஞ்சால னெடுமுதற் புதல்வனைக்
கழுத்தெழத் திருகிப் பறித்த காலைக்
கோயிற் கம்பலை யூர்முழு துணர்த்தலிற்
றம்பியர் மூவரு மைம்பான் மருகரு
முடன்சமர் தொடங்கி யொருங்குகளத் தவிய
வாள்வாய்த்துப் பெயர்ந்த காலை யாள்வினைக்
கின்னோ ரினிப்பிற ரில்லென வொராங்குத்
தன்முதற் றாதையொடு கோன்முத லமரர்
வியந்தனர் நயந்த விசும்பி
னியன்றலை யுலகமு மறிந்ததா லதுவே’’
இப்பாரதப்பாட்டினுள் அவ்வாறாதல் காண்க.
ஒருவற்குப் பல்
படை உடைதலின் மற்றவன் ஒள்வாள் வீசிய
நூழிலும் - அங்ஙனம் நல்லிசை
எய்திய ஒருவற்கு வஞ்சத்தாற்
கொன்ற வேந்தன் பல்படை புறங்கொடுத்தலின் அவரைக் கோறல்
புரிதல் அறனன்றென்று கருதாது அவன் வாளாற் றடிந்து கொன்று
குவித்தற்
கண்ணும்;
வஞ்சத்தான் தன்
வேந்தனைக் கொன்றமைபற்றித்
தனக்குக்
கெட்டோரையும் அடங்கக் கோறற்கு உரியானை
நல்லிசை முன்னர்ப்
பெற்றோனென்றார். நூழிலாவது
கொன்று குவித்தல்,
‘‘வள்ளை நீக்கி வயமீன் முகந்து
கொள்ளை சாற்றிய கொடுமுடி வலைஞர்
வேழப் பழனத்து நூழிலாட் டோதை’’
(பத்துப். மதுரைக்.255-257)
என்றாற் போல.
உ-ம்:
‘‘அறத்திற் பிறழ வரசெறிந் தானை
மறத்திற் புறங்கண்டு மாறான் - குறைத்தடுக்கிச்
செல்லுங்காற் காட்டுத்தீச் சென்றாங்குத் தோன்றுமே
பல்படையார் பட்ட படி’’
என வரும்.
புல்லித் தோன்றும்
பன்னிரு துறைத்தே. பொருந்தித் தோன்றும்
பன்னிரு துறையினை யுடைத்துத் தும்பைத்திணை எ-று.

