Primary tabs

இன்னும், உளப்படப்
புல்லித் தோன்றும் பன்னிரு துறைத்து
எனவுங் கூட்டிப் பன்னிரண்டுடன் கண்ணும் முற்கூறிய
வெட்சித்திணை முதலியவற்றான் நிகழுந் தும்பையும் வந்துகூடப் பின்
அவற்றிற்கு முரியவாய்ப் பொருந்தித்தோன்றும் பன்னிரு
துறையினையுடைத்துத் தும்பைத்திணை என்றும் பொருள் கொள்க.
பொருள் இடமாகத் துறை இடத்தியல் பொருளாங்கால், ஏனைத்
திணைக்கட் கூறனாற் போல, ஒன்று நிகழ்ந்தபின் ஒன்றுநிகழாது
இரண்டு படைக்கும் பொருந்த ஒரு காலத்து இத்திணை
நிகழுமென்றற்குப் ‘புல்லித் தோன்றும்’ என்றார். பல்பெருங் காதமாகிய
நெடுநெறியிடைத் துணிந்த இடத்தையும் உலகம் துறை யென்பது
போல இச் சூத்திரத்துத் துறையைத் தொகுதியுடன் அறுதி
காட்டிற்றென்றுணர்க. இவ்விலக்கணம் மேல் வருகின்ற திணைகட்கும்
ஒக்கும். (17)
வாகை பாலையது புறனாதல்
இவ் வாகைத்திணை
பாலையெனப்பட்ட அகத்திணைக்குப்
புறனாமென்கின்றது.
(இ-ள்.)
வாகை தானே - இனிக் கூறாதுநின்ற. புறத்திணையுள்
வாகையெனப்பட்டது தானே;
பாலையது புறனே. பாலையென்னும்
அகத்திணைக்குப் புறனாம்
எ-று.
என்னை? பாலைக்குப்
புணர்ச்சியின் நீங்கி, இல்லறம் நிகழ்த்திப்
புகழெய்துதற்குப் பிரியுமாறுபோலச், சுற்றத்தொடர்ச்சியின் நீங்கி
அறப்போர்செய்து
துறக்கம் பெறுங் கருத்தினாற் சேறலானும்,
வாளினுந்தாளினும்
நிறையினும் பொறையினும் வென்றி
யெய்துவோரும் மனையோரை நீங்கிச் சேறலானும் பிரிவுள
தாயிற்று.
பாலை தனக்கென ஒரு நிலமின்றி நால்வகை நிலத்தும் நிகழுமாறு
போல, முற்கூறிய புறத்திணை நான்கும் இடமாக வாகைத்
திணைநிகழ்தலிற்
றனக்கு நிலமின்றாயிற்று. ‘‘நாளு நாளு மாள்வினை
யழுங்க, வில்லிருந்து மகிழ்வோர்க் கில்லையாற்
புகழ்’’ என
ஆள்வினைச் சிறப்புக் கூறிப் பிரியுமாறு போல, இதற்குப் துறக்கமே
எய்தும் ஆள்வினைச்சிறப்புக் கூறலுங் கொள்க. பாலை
பெருவரவிற்றாய்த் தொகைகளுள் வருமாறு போல வாகையும்
பெருவரவிற்றாய் வருதலும் கொள்க.
வாகைத்திணையது பொது
இலக்கணம்
பாகுபட மிகுதிப் படுத்த லென்ப.
இஃது அவ் வாகைத்திணைக்குப் பொதுவிலக்கணங் கூறுகின்றது.
(இ-ள்.)
தாவில் கொள்கைத் தத்தங்
கூற்றை - வலியும்
வருத்தமுமின்றி
இயல்பாகிய ஒழுக்கத்தானே
நான்கு, வருணத்
தோரும் அறிவருந்தாபதர்
முதலியோருந் தம்முடைய கூறுபாடுகளை;
பாகுபட
மிகுதிப்படுத்தல்
என்ப - இருவகைப்பட
மிகுதிப்படுத்தலென்று
கூறுவர் ஆசிரியர் எ-று.
இருவகையாவன,
தன்னைத் தானே மிகுதிப்படுத்தலும்
பிறர்
மீக்கூறுபடுத்தலுமாம். இனி இருவகைக்குள்
உறழ்ச்சியாற் பெற்ற
வென்றியை வாகையெனவும்
இயல்பாகப் பெற்ற வென்றியை
முல்லையெனவுங்
கூறுவர். படுதலென்னாது
படுத்த லெனப்
பிறவினையாற்

