Primary tabs

உயர்ந்தோர் இவரென் றுரைத்தலும் வாகை யென்றற்கு. ஒன்றனோடு
ஒப்பு ஒரீஇக் காணாது மாணிக்கத்தினை நன்றென்றாற்போல
உலகமுழுதும் அறியும் உயர்ச்சியுடைமையும் அது. ‘தாவில் கொள்கை’
யெனவே இரணியனைப்போல வலியானும் வருத்தத்தானுங்
கூறுவித்துக் கோடல் வாகையன்றாயிற்று. (19)
வாகையின் சிறப்பிலக்கணம்
பொதுவகையாற் கூறல்
ஐவகை மரபி னரசர் பக்கமும்
இருமூன்று மரபி னேனோர் பக்கமும்
மறுவில் செய்தி மூவகைக் காலமும்
நெறியி னாற்றிய வறிவன் றேயமும்
நாலிரு வழக்கிற் றாபதப் பக்கமும்
பாலறி மரபிற் பொருநர் கண்ணும்
அனைநிலை வகையோ டாங்கெழு வகையிற்
றொகைநிலை பெற்ற தென்மனார் புலவர்.
இது வாகைத்திணைக்குப்
பொதுவிலக்கணங் கூறினார். இன்னும்
அதற்கேயாவதொரு
சிறப்பிலக்கணம் பொதுவகையாற்
கூறுகின்றது.
மேற்கூறி
வருகின்றாற்போலத் துறைப்படுத்திக்
கூறுதற்கேலாத
பரப்புடைச் செய்கை
பலவற்றையுந் தொகுத்து ஒரோவொன்றாக்கி
எழுவகைப்படுத்திக்
கூறுதலின்.
(இ-ள்.)
அறுவகைப்பட்ட பார்ப்பனப் பக்கமும் - ஆறு
கூற்றினுட்
பட்ட பார்ப்பியற் கூறும்;
ஆறு பார்ப்பியலென்னாது ‘வகை’யென்றதனான் அவை தலை
இடை கடையென ஒன்று மும்மூன்றாய்ப் பதினெட்டாம் என்று
கொள்க.
அவை ஓதல் ஓதுவித்தல் வேட்டல் வேட்பித்தல்
கொடுத்தல்
கோடல் என ஆறாம். இருக்கும் எசுரும் சாமமும் இவை
தலையா
ஓத்து; இவை வேள்வி முதலியவற்றை விதித்தலின் இலக்கணமுமாய்,
வியாகரணத்தான் ஆராயப்படுதலின் இலக்கியமுமாயின. அதர்வமும்
ஆறங்கமுந் தருமநூலும் இடையாய ஓத்து; அதர்வம் வேள்வி
முதலிய
ஒழுக்கங்கூறாது பெரும்பான்மையும்
உயிர்கட்கு ஆக்கமேயன்றிக்
கேடுஞ்
சூழும் மந்திரங்கள் பயிறலின் அவற்றொடு கூறப்படாதாயிற்று.
ஆறங்கமாவன,
உலகியற்சொல்லை ஒழித்து வைதிகச் சொல்லை
ஆராயும் நிருத்தமும், அவ்விரண்டையும்
உடனாராயும் ஐந்திரத்
தொடக்கத்து வியாகரணமும், போதாயனீயம் பாரத்துவாசம்
ஆபத்தம்பம், ஆத்திரேயம் முதலிய கற்பங்களும்,
நாராயணீயம்
வராகம் முதலிய கணிதங்களும், எழுத்

