Primary tabs

காட்டிக் கோடலும் பிறவுங் கோடற்பகுதியாம்.
பார்ப்பியலென்னாது
பக்கமென்றதனானே பார்ப்பார்
ஏனை
வருணத்துக்கட்கொண்ட பெண்பாற்கட்டோன்றின வருணத்தார்க்குஞ்
சிகையும் நூலும் உளவேனும் அவர் இயற்றிற்கெல்லாம் உரியரன்றிச்
சிலதொழிற்கு உரியரென்பது கொள்க.
உ-ம்:
‘‘ஓதல் வேட்ட லவைபிறர்ச் செய்த
லீத லேற்றலென் றாறுபுரிந் தொழுகும்
அறம்புரி யந்தணர் வழிமொழிந் தொழுகி’’
(பதிற்றுப்.24)
இஃது அந்தணர்க்குக் கூறிய பொது.
‘‘முறையோதி னன்றி முளரியோ னல்லன்
மறையோதி னானிதுவே வாய்மை -
யறிமினோ
வீன்றாள் வயிற்றிருந்தே யெம்மறையு
மோதினான்
சான்றான் மகனொருவன் றான்’’
இஃது ஓதல்.
இனி ஓதற்சிறப்பும்
ஓதினாற்கு உளதாஞ் சிறப்புங் கூறுதலுங்
கொள்க.
‘‘இம்மை பயக்குமா லீயக் குறைவின்றாற்
றம்மை விளக்குமாற் றாமுளராக் கேடின்றா
லெம்மை யுலகத்தும் யாங்காணேங் கல்விபோல்
மம்ம ரறுக்கு மருந்து’’
(நாலடி.132)
‘‘ஆற்றவுங் கற்றா ரறிவுடையாரஃதுடையார்
நாற்றிசையுஞ் செல்லாத நாடில்லை யந்நாடு
வேற்றுநா டாகா தமவேயா மாதலா
லாற்றுணா வேண்டுவ தில்’’
(பழமொழி)
‘‘ஒத்த முயற்சியா னொத்து வெளிப்படினு
நித்திய மாக நிரம்பிற்றே - யெத்திசையுந்
தாவாத வந்தணர் தாம்பயிற்றக் காவிரிநாட்
டோவாத வோத்தி னொலி’’
இஃது ஓதுவித்தல்.
‘‘எண்பொருள வாகச் செலச்சொல்லித் தான்பிறர்வாய்
நுண்பொருள் காண்ப தறிவு’’
(குறள்.424)
இஃது ஓதுவித்தற் சிறப்பு.
‘‘நன்றாய்ந்த நீணிமிர்சடை
முதுமுதல்வன் வாய்போகா
தொன்றுபுரிந்த வீரிரண்டி
னாறுணர்ந்த வொருமுதுநா
லிகல்கண்டோர் மிகல்சாய்மார்
மெய்யன்ன பொய்யுணர்ந்து
பொய்யோராது மெய்கொளீஇ
மூவேழ் துறையு முட்டின்று போகிய
வுரைசால் சிறப்பி னுரவோர் மருக
வினைக்குவேண்டி நீபூண்ட
புலப்புல்வாய்க் கலைப்பச்சைக்
சுவற்பூண்ஞாண் மிசைப்பொலிய
மறங்கடிந்த வருங்கற்பின்
அறம்புகழ்ந்த வலைசூடிச்
சிறுநுதற்பே ரகலல்குற்
சிலசொல்லிற் பலகூந்த
னினக்கொத்தநின் றுணைத்துணைவியர்
தமக்கமைந்த தொழில்கேட்பக்
காடென்றா நாடென்றாங்
கீரேழி

