தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

Tholkappiyam-nachinarkinyam

நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   2419


னிடமுட்டா அது
நீர்நாண நெய்வழங்கியு
மெண்ணாணப் பலவேட்டும்
மண்ணாணப் புகழ்பரப்பியும்
அருங்கடிப் பெருங்காலை
விருந்துற்றநின் றிருந்தேந்துநிலை
யென்றுங், காண்கதில் லம்ம யாமே குடாஅது
பொன்படு நெடுவரைப் புயலேறு சிலைப்பிற்
பூவிரி புதுநீர்க் காவிரி புரக்குந்
தண்புனற் படப்பை யெம்மூ ராங்க
ணுண்டும் தின்று மூர்ந்து மாடுகஞ்
செல்வ லத்தை யானே செல்லாது
மழையண் ணாப்ப நீடிய நெடுவரைக்
கழைவள ரிமயம் போல
நிலீஇய ரத்தைநீ நிலமிசை யானே’’           (புறம்.166)

இதனுள் வேட்டவாறும் ஈந்தவாறுங் காண்க.

‘‘ஈன்ற வுலகளிப்ப வேதிலரைக் காட்டாது
வாங்கியதா யொத்தானம் மாதவத்தோ - னீந்த
மழுவா ணெடியோன் வயக்கஞ்சால் வென்றி
வழுவாமற் காட்டிய வாறு.’’

இது பரசுராமனைக் காசிபன் வேட்பித்த பாட்டு.

‘‘நளிகட லிருங்குட்டத்து’’  என்னும்    (26)    புறப்பாட்டினுள்,
அந்தணன் வேட்பித்தலும் அரசன் வேட்டலும் வந்தன.

‘‘இலனென்னு மெவ்வ முரையாமை யீதல்
குலனுடையான் கண்ணே யுள’’              (குறள்.223)

இஃது ஈதல்.

‘‘ஈத்துவக்கு மின்ப மறியார்கொ றாமுடைமை
வைத்திழக்கும் வன்க ணவர்.’’              (குறள்.228)

இஃது ஈதற் சிறப்பு.

‘‘நிலம்பொறை யாற்றா நிதிபல கொண்டுங்
குலம்பெறுதீங் கந்தணர் கொள்ளார் - நலங்கிளர்
தீவா யவிசொரியத் தீவிளங்கு மாறுபோற்
றாவா தொளிசிறந்த தாம்’’

   (பெரும்பொருள் விளக்கம் புறத்திரட்டு.1160.குடிமரபு.10)

இஃது ஏற்றல்.

‘‘தான்சிறி தாயினுந் தக்கார்கைப் பட்டக்கால்
வான்சிறிதாப் போர்த்து விடும்’’             (நாலடி.48)

இஃது ஏற்றற் சிறப்பு.

ஓதுவித்தலும் வேட்பித்தலும் ஏற்றலும் அந்தணர்க்கே உரிய.

ஐவகை  மரபின் அரசர் பக்கமும் - ஓதல் வேட்டல் ஈதல் காத்தல்
தண்டஞ்  செய்தல்   என்னும் ஐவகையிலக்கணத்தை யுடைய அரசியற்
கூறும்.

‘வகை’  யென்றதனான் முற்கூறிய மூன்றும்  பொழவும்,  பிற்கூறிய
இரண்டுஞ் சிறப்புமாதல் கொள்க.

பார்ப்பார்க்குரியவாக  விதந்த   வேள்வியொழிந்த  வேள்விகளுள்
இராசசூயமுந்     துரங்கவேள்வியும்     போல்வன    அரசர்க்குரிய
வேள்வியாம்.   கலிங்கங்   கழுத்து   யாத்துக்   குளம்புங்   கோடும்
பொன்னணிந்த    புனிற்றாநிரையுங்,   கனகமும்   கமுகும்    அன்ன
முதலியனவும்  செறிந்த  படப்பை  சூழ்ந்த மனையுந், தண்ணடையுங்,
கன்னியரும், பிறவுங்
 

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 08-09-2016 23:19:45(இந்திய நேரம்)