தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

Tholkappiyam-nachinarkinyam

நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   2420


கொடுத்தலும்,   மழுவாணெடியோ   னொப்ப   உலகு    முதலியன
கொடுத்தலும்  போல்வன  அவர்க்குரிய ஈதலாம். படைக்கலங்களானும்
நாற்படையானுங்  கொடைத்தொழிலானும்  பிறவாற்றானும்  அறத்தின்
வழாமல்  காத்தல்  அவர்க்குரிய  காப்பாம்.  அங்ஙனம் காக்கப்படும்
உயிர்க்கு    ஏதஞ்செய்யும்   மக்களையாயினும்   விலங்கையாயினும்
பகைத்திறத்தையாயினும் அறஞ்செய்யா அரசையாயினும்  விதிவழியான்
தண்டித்தல்  அவர்க்குரிய  தண்டமாம்.  இஃது  அரசர்க்கு  அறமும்
பொருளும் இன்பமும் பயக்கும்.

‘வகை’  யென்றதனானே  களவுசெய்தோர்  இருக்கையிற்  பொருள்
கோடலும்,  ஆறிலொன்று  கோடலுஞ், சுங்கங்கோடலும், அந்தணர்க்கு
இறையிலி  கொடுக்குங்கால்  இத்துணைப்பொருள்  நும்மிடத்து   யான்
கொள்வலெனக்   கூறிக்கொண்டு   அதுகோடலும்,  மறம்பொருளாகப்
பகைவர்நாடு  கோடலுந்,  தமரும் அந்தணரும் இல்வழிப்  பிறன்றாயங்
கோடலும்,     பொருளில்வழி      வாணிகஞ்      செய்துகோடலும்,
அறத்திற்றிரிந்தாரைத்    தண்டத்திற்    றகுமாறு   பொருள்கோடலும்
போல்வன  கொள்க.  அரசியலென்னாது  ‘பக்க’ மென்றதனான் அரசர்
ஏனைவருணத்    தார்கட்    கொண்ட   பெண்பாற்கட்   டோன்றிய
வருணத்துப் பகுதியோருஞ் சில தொழிற்குரிய என்று கொள்.

உ-ம்:

‘‘சொற்பெயர் நாட்டங் கேள்வி நெஞ்சமென்
றைந்துடன் போற்றி யவைதுணை யாக
வெவ்வஞ் சூழாது விளங்கிய கொள்கைக்
காலை யன்ன சீர்சால் வாய்மொழி
யுருகெழு மரபிற் கடவுட் பேணியர்
கொண்ட தீயின் சுடரெழு தோறும்
விருப்புமெய் பரந்த பெரும்பெய ராவுதி’’ 
                                 (பதிற்றுப்.21)

என வரும்.

‘‘கேள்வி கேட்டுப் படிவ மொடியாது
வேள்வி வேட்டனை யுயர்ந்தோ ருவப்பச்
சாயறல் கடுக்குந் தாழிருங் கூந்தல்
வேறுபடு திருவி னின்வழி வாழியர்
கொடுமணம் பட்ட வினைமா ணருங்கலம்
பந்தர்ப் பயந்த பலர்புகழ் முத்தம்
வரையக நண்ணிக் குறும்பொறை நாடித்
தெரியுநர் கொண்ட சிரறுடைப் பைம்பொறிக்
கவைமரங் கடுக்குங் கவலைய மருப்பிற்
புள்ளி யிரலைத் தோலூ னுதிர்த்துத்
தீதுகளைந் தெஞ்சிய திகழ்விடு பாண்டிற்
பருதி போகிய புடைகிளை கட்டி
யெஃகுடை யிரும்பி னுள்ளமைத்து வல்லோன்
சூடுநிலை யுற்றுச் சுடர்விடு தோற்றம்
விசும்பாடு மரபிற் பருந்தூ றளப்ப
நலம்பெறு திருமணி கூட்டு நற்றோள்
ஒடுங்கீ ரோதி யொண்ணுதல் கருவி
லெண்ணியன் முற்றி யீரறிவு புரிந்து
சால்புஞ் செம்மையு முளப்படப் பிறவுங்
காவற் கமைந்த வரசுதுறை போகிய
வீறுசால்
 

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 08-09-2016 23:19:56(இந்திய நேரம்)