தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tholkappiyam-nachinarkinyam

நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   2437


மகட்பா லானும்
முலையு முகனுஞ் சேர்த்திக் கொண்டோன்
தலையொடு முடிந்த நிலையொடு தொகைஇ
யீரைந் தாகு மென்ப பேரிசை
மாய்ந்த மகனைச் சுற்றிய சுற்றம்
ஆய்ந்த பூசன் மயக்கத் தானுந்
தாமே யேங்கிய தாங்கரும் பையுளுங்
கணவனொடு முடிந்த படர்ச்சி நோக்கிச்
செல்வோர் செப்பிய மூதா னந்தமும்
நனிமிகு சுரத்திடைக் கணவனை யிழந்து
தனிமகள் புலம்பிய முதுபா லையுங்
கழிந்தோர் தேஎத் தழிபடருறீஇ
யொழிந்தோர் புலம்பிய கையறு நிலையுங்
காதலி யிழந்த தபுதார நிலையும்
காதலன் இழந்த தாபத நிலையும்
நல்லோள் கணவனொடு நனியழற் புகீஇச்
சொல்லிடை யிட்ட பாலை நிலையும்
மாய்பெருஞ் சிறப்பிற் புதல்வன் பெயரத்
தாய்தப வரூஉந் தலைப்பெய னிலையும்
மலர்தலை யுலகத்து மரபுநன் கறியப்
பலர்செலச் செல்லாக் காடு வாழ்த்தொடு
நிறையருஞ் சிறப்பின் துறையிரண் டுடைத்தே.
 

இது   முற்கூறிய   காஞ்சித்திணை   வீடேதுவாகவன்றி  வாளாது
நிலையின்மை    தோன்றக்    கூறும்பகுதி   கூறுகின்றது.   இதுவும்
வாகையைத்  தொகுத்தோதிய பொதுச்சூத்திரம் போலத் துறை யொடும்
படாது நிலையின்மைப் பொருளை வகுத்தோதிய சூத்திர மென்றுணர்க.

(இ-ள்.)   மாற்றரும்   கூற்றம்   சாற்றிய பெருமையும் -  பிறராற்
றடுத்தற்கரிய   கூற்றம்   வருமெனச்   சான்றோர்  சாற்றிய  பெருங்
காஞ்சியானும்;

கூற்றாவது,  வாழ்நாள்   இடையறாது   செல்லுங்   காலத்தினைப்
பெருள்வகையாற்  கூறுபடுத்துங்  கடவுள். அதனைப் பேரூர்க்  கூற்றம்
போலக் கொள்க. கூற்றத்திற்குக் காலமென்பது வேறன்மை யிற் ‘காலம்
உலகம்’
என (தொல். சொல். கிளவி.58) முன்னே கூறினார்.

உ-ம்:

‘‘பல்சான் றீரே பல்சான் றீரே
கயன்முள் ளன்ன நரைமுதிர் திரைகவுட்
பயனின் மூப்பிற் பல்சான் றீரே
கணிச்சிக் கூர்ம்படைக் கடுந்திற லொருவன்
பிணிக்குங் காலை யிரங்குவிர் மாதோ
நல்லது செய்த லாற்றீ ராயினு
மல்லது செய்த லோம்புமி னதுதான்
எல்லாரு முவப்ப தன்றியும்
நல்லாற்றுப் படூஉ நெறியுமா ரதுவே’’         (புறம்.195)

இது  வீடேதுவாக   வன்றி   வீடுபேற்று   நெறிக்கட்   செல்லும்
நெறியேதுவாகக் கூறியது.

‘‘இருங்கடலுடுத்த’’ என்னும் (369) புறப்பாட்டும் அது.

கழிந்தோர்      ஒழிந்தோர்க்குக்    காட்டிய   முதுமையும்   -
இளமைத்தன்மை  கழிந்து  அறிவுமிக்கோர் இளமை கழியாத அறிவில்
மாக்கட்குக் காட்டிய முதுகாஞ்சியானும்;

முதுமை  மூப்பாதலான்   அது   காட்சிப்பொருளாக    இளமை
நிலையாமை கூறிற்றாம்.

உ-ம்:

‘‘இனிநினைந் திரக்க மாகின்று திணிமணற்
 

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 08-09-2016 23:23:07(இந்திய நேரம்)