தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

Tholkappiyam-nachinarkinyam

நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   3183


ப் பிரம்பின் மூதரிற் செறியும்
பல்வேன் மத்தி கழாஅ ரன்னவெம்
இளமை சென்று தவத்தொல் லஃதே
இனிமையெவன் செய்வது பொய்ம்மொழி யெமக்கே.’’

                                       (அகம்.6)

பரத்தையொடு  புனலாடி வந்தமைகேட்டுத் தலைவி புலந்தது. இது
இளவேனில் வந்தது. ஏனைய வந்தவழிக் காண்க.

நாடகவழக்கானன்றி  உலகியல்  வழக்கானும்  அச்  சிறு பொழுது
அப்பெரும்பொழுதிற்குப் பொருந்து மென்றற்குத் ‘தோன்று’ மென்றார்.
இதன்   பயன்  இவ்விரண்டு  நிலத்துக்கு  மற்றை  மூன்ற  காலமும்
பெரும்பான்மை வாராதென்றலாம்.                           (8)

பாலைக்குரிய காலம்
 

9.
நடுவுநிலைத் திணையே நண்பகல் வேனிலொடு
முடிவுநிலை மருங்கின் முன்னிய நெறித்தே.
 

இது  நிலனுடைய நான்கற்குங்   காலங்   கூறி   அந்நான்கற்கும்
பொதுவாகிய பாலைக்குங் காலங் கூறுகின்றது.

(இ-ள்)   நடுவு  நிலைத்திணையே  -  பாலைத்திணை; நண்பகல்
வேனிலொடு   -   எற்பாடுங்   காலையும்  என்னும்  இரு கூற்றிற்கு
நடுவணதாகிய  ஒரு  கூறு தான் கொண்டு வெம்மை செய்து பெருகிய
பெரும்பகலோடும்     இளவேனிலும்     முதுவேனிலும்    என்னும்
இரண்டனோடும்;   முடிவு  நிலை  மருங்கின்  -  பிரிவெனப்படுதற்கு
முடிவுடைத்தாகிய   குறிஞ்சியும்   முல்லையுமாகிய   ஒரு  மருங்கின்
கண்ணே;  முன்னிய  நெறித்து  -  ஆசிரியன்  மனங்கொள்ளப்படும்
நெறியையுடைத்து எ-று.

‘நிலை’  யென்றது  நிலத்தினை. முடிவுநிலைப்பகுதிக்கண் முன்னப்
படுமெனவே  அத்துணை  யாக்கமின்றி  ஒழிந்த மருதமும் நெய்தலும்
முடியாநிலமாய்  அத்துணை முன்னப்படாவாயின பாலைக் கென்பதாம்.
பிரிவின்
 

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 09-09-2016 01:43:15(இந்திய நேரம்)