Primary tabs

மான்
வலமிகு முன்பின் மழகளிறு பார்க்கும்
மரம்பயில் சோலை மலியப் பூழியர்
உருவத் துருவி னாண்மேய லாரு
மாரி யெண்கின் மலைச்சுர நீளிடை
நீநயந்து வருத லெவனெனப் பலபுலந்
தழுதனை யுறையும் அம்மா வரிவை
பயங்கெழு பலவின் கொல்லிக் குடவரைப்
பூதம் புணர்த்த புதிதியல் பாவை
விரிகதிர் இளவெயிற் றோன்றி யன்னநின்
ஆய்நல முள்ளி வரினெமக்
கேம மாகு மலைமுத லாறே.”
(நற்.132)
எனத் தலைவி ஆற்றினதருமை கூறியதற்குத் தலைவன் கூறியது.
இரட்டுறமொழித லென்பதனான், ‘ஆற்றிடையுறுத’ற்கு வரைவிடை
வைத்துப் பிரிந்தான் ஆற்றிடை வருத்தமுற்றுக் கூறுவனவுங் கொள்க.
அது போகின்றான் கூறுவனவும் மீண்டவன் பாகற்குக் கூறுவனவுமாம்.
“ஓம்புமதி வாழியோ வாடை பாம்பின்
தூங்குதோல் கடுக்குந் தூவெள் ளருவிக்
கல்லுயர் நண்ணி யதுவே நெல்லி
மரையின மாரு முன்றில்
புல்வேய் குரம்பை நல்லோ ளூரே.” (குறுந்.235)
“கவலை கெண்டியவ கல்வாய்ச் சிறுகுழி
கொன்றை யொள்வீதாஅய்ச் செல்வர்
பொன்செய் பேழை மூய்திறந் தன்ன
காரெதிர் புறவி னதுவே யுயர்ந்தோர்க்கு
நீரொடு சொரிந்த மிச்சில் யாவர்க்கும்
வரைகோ ளறியாச் சொன்றி
நிரைகோற் குறுந்தொடிதந்தை யூரே.” (குறுந்.233)
அவ்வினைக்கு இயல்பே - அத்தோழியிற் கூட்டத்திடத்துத்
தலைவன் கூற்று நிகழ்வதாகிய இலக்கணமாம்
எ-று. (12)
உலகியலாற் புணர்க்கும் பாங்கனிமித்தம் இத்துணையவெனல்
இது மேற் பாங்கிநிமித்தங் கூறிய அதிகாரத்தானே பாங்கன்
நிமித்தங்
கூறுகின்றார். ‘வாயில் பெட்பினும்’ (தொல்.பொ.102) என்ற
பாங்கனிமித்தம் போலாது இது வேறுபடக் கூறலின் எய்தியது விலக்கிப்
பிறிதுவிதி வகுத்தது. என்னை? பாங்கன் தலைவியை எதிர்ப்பட்டு
வந்து தலைவற்கு உரைத்தலன்றிக், காளையரொடு கன்னியரை
உலகியலாற் புணர்க்குமாறு புணர்க்குந் துணையே யாகலின்.
(இ-ள்.) அகனைந்திணையும் அல்லாதவழிப் பாங்கன் கண்ணவாகிய
நிமித்தம் பன்னிரு பகுதியவாம் எ-று.
எண்வகை மணத்தினும் இடைநின்று புணர்க்கும் பார்ப்பான் இரு
வகைக் கோத்திரம் முதலியனவுந் தானறிந்து இடைநின்று புணர்த்தல்
வன்மை அவர் புணர்தற்கு நிமித்தமாதலின் அவை அவன்கண்ண
வெனப்படும். இவனைப் பிரசாபதியென்ப. நிமித்தமுங் காரணமும்
ஒன்று. காரணம் பன்னிரண்டெனவே காரியமும் பன்னிர

