தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

Tholkappiyam-nachinarkinyam

நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   3478


யினும்    இட்டு வைத்தனவாம்; இவை வருத்தத்திற்கு ஏதுவாம். இது
விடியல்   நிகழுமென்றற்குப்   பொழுதென்றார்;   எனவே  காண்பன
விடியலிற்   காணுமென்றார்.   ‘மயங்கும்’   என்றதனான்  தோழியும்
உடன்மயங்கும். அது,

“இக்காந்தண் மென்முகைமேல் வண்டன்றஃதிம்முகையில்
கைக்காந்தண் மெல்விரலாய் காணிதோ - புக்குச்
செறிந்ததுபோற் றோன்றுந் தொடுபொறி யாம்பண்டு
அறிந்ததொன் றன்ன துடைத்து.”

புகாஅக்  காலைப் புக்கு எதிர்ப்பட்டுழிப் பகாஅ விருந்தின் பகுதிக்
கண்ணும்    -   உண்டிக்காலத்துத்   தலைவியில்லத்துத்   தலைவன்
புக்கெதிர்ப்  பட்ட  வழி,  நீக்கி நிறுத்தாத விருந்து ஏற்றுக்கொள்ளும்
பகுதிக்கண்ணும்:

எனவே,  மனையகம் புகுதற்கு ஒவ்வாத மிக்க தலைவன் புகுந்தால்
இஃதொன்  றுடைத்தெனத் தேராது தாய் அவனை விருந்தேற்று நீக்கி
நிறுத்தற் பகுதியுந் தழீஇயினவாறாயிற்று.

புகாக்காலமாதலிற் பகாவிருந்தென்றார். விடியற்காலமாயிற் றலைவன்
புகானெனவும், புகாக்காலத்துப் புக்கஞான்றாயின்  அவர் விருந்தேற்றுக்
கோடல்   ஒருதலையென்று   புகும்   என்றுங்   கொள்க.   தலைவி
காட்சியாசையிற்  கலங்கிய  தற்கேற்பத்  தலைவர்க்குங்  காட்சியாசை
கூறிற்று. அது,

“சுடர்த்தொடீஇ கேளாய் தெருவினா மாடும்
மணற்சிற்றில் காலிற் சிதையா அடைச்சிய
கோதை பரிந்து வரிப்பந்து கொண்டோடி
நோதக்க செய்யும் சிறுபட்டி மேலோர்நாள்
அன்னையும் யானும் இருந்தேமா இல்லிரே
உண்ணுநீர் வேட்டேன் எனவந்தாற் கன்னை
அடர்பொற் சிரகத்தால் வாக்கிச் சுடரிழாய்
உண்ணுநீ ரூட்டிவா வென்றா ளெனயானும்
தன்னை அறியாது சென்றேன்மற் றென்னை
வளைமுன்கை பற்றி நலியத் தெருமந்திட்டு
அன்னாய் இவனொருவன் செய்ததுகா ணென்றேனா
அன்னை அலறிப் படர்தரத் தன்னையான்
உண்ணுநீர் விக்கினான் என்றேனா அன்னையுந்
தன்னைப் புறம்பழித்து நீவமற் றென்னைக்
கடைக்கணாற் கொல்வான்போல் நோக்கி நகைக்கூட்டஞ்
செய்தானக் கள்வன் மகன்.”
                  (கலி.51)

இது புகாக்காலத்துப்   புக்கானை   விருந்தேற்றுக்   கொண்டமை
இன்னொருகாலத்துத் தலைவி தோழிக்குக் கூறியவாறு காண்க.

“அன்னை வாழ்க பலவே தெண்ணீர்
இருங்கடல் வேட்டம் எந்தை புக்கெனத்
தார்மணி நெடுந்தேர் நீவி யானுமோர்
எல்லமை விருந்தின னென்ற
மெல்லம் புலம்பனைத் தங்கென் றோளே.”

இது தோழிகூற்றுமாம்.

‘ஒன்றிய தோழி’
 

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 09-09-2016 02:39:18(இந்திய நேரம்)