Primary tabs

(41) யென்றனான் தோழிகூற்று வந்துழிக் காண்க.
“மண்ணிய சென்ற ஒண்ணுதல் அரிவை
புனறரு பசுங்காய் தின்றதன் றப்பற்கு
ஒன்பதிற் றொன்பது களிற்றோ டவணிறை
பொன்செய் பாவை கொடுப்பவுங் கொள்ளான்
பெண்கொலை புரிந்த நன்னன் போல
வரையா நிரயத்துச் செலீஇயரோ அன்னை
யொருநாள், நகைமுக விருந்தினன் வந்தெனப்
பகைமுக வூரிற் றுஞ்சலோ விலளே.” (குறுந்.292)
இது புகக்காலத்துத் தலைமைமிக்க தலைவன் புக்கதற்கு
விருந்தேலாது செவிலி இரவுந் துயிலாதாளைத் தலைவி முனிந்து
கூறியது.
வேளாண் எதிரும் விருந்தின்கண்ணும் - அங்ஙனம் விருந்தா
தலேயன்றித் தலைவி வேளாண்மை செய்ய எதிர்கொள்ளக் கருதுதல்
காரணத்தான் தோழி அவனை விருந்தேற்றுக் கோடற் கண்ணும்:
என்றது, தலைவி அவற்கு உபகாரஞ்செய்யக் கருதி
அதனைக்
குறிப்பாற் கூறத், தோழி அவனை விருந்தாய்த் தங்கென்னும்.
உ-ம்:
“நாள்வலை முகந்த கோள்வல் பரதவர்
நுணங்குமணல் ஆங்கண் உணங்கப் பெய்ம்மார்
பறிகொள் கொள்ளையர் மறுக உக்க
மீனார் குருகின் கானலம் பெருந்துறை
எல்லை தண்பொழிற் சென்றெனச் செலீஇயர்
தேர்பூட் டயர வேஎய் வார்கோல்
செறிதொடி திருத்திப் பாறுமயிர் நீவிச்
செல்லினி மடந்தைநின் தோழியொடு மனையெனச்
சொல்லிய அளவை தான்பெரிது கலுழ்ந்து
தீங்கா யினளிவ ளாயின் தாங்காது
நொதுமலர் போலப் பிரியிற் கதுமெனப்
பிறிதொன் றாகலும் அஞ்சுவல் அதனான்
சேணின் வருநர் போலப் பேணாய்
இருங்கலி யாணரெஞ் சிறுகுடித் தோன்றின்
வல்லெதிர் கொண்டு மெல்லிதின் வினைஇத்
துறையும் மான்றின்று பொழுதே சுறவும்
ஓதம் மல்கலின் மாறா யினவே
எல்லின்று தோன்றல் செல்லா தீமென
எமர்குறை கூறத் தங்கி ஏமுற
இளையரும் புரவியும் இன்புற நீயும்
இல்லுறை நல்விருந் தயர்தல்
ஒல்லுதும் பெருமநீ நல்குதல் பெறினே.” (அகம்.300)
இதனுள், ‘தான் பெரிது கலுழ்ந்து தீங்காயின’ ளெனவே, அக்
குறிப்புத்
தலைவன் போகாமற் றடுப்பக் கூறியதென்று உணர்ந்து
தோழி கூறினாள்.
வாளான் எதிரும் பிரிவினானும் - வாளாண்மை செய்தற்கு ஒத்த
பிரிவு தோன்றியவழியும்:
ஆண்டுத் தலைவி மேற்றுக் கிளவி. மூவகைப் பிரிவி

