தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tholkappiyam-nachinarkinyam

நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   3480


னும்     பகை வயிற்பிரிவை விதந்தோதி ஓதலும் தூதும் வரைவிடை
வைத்துப்  பிரிவிற்குச் சிறந்தில என்றாராம். அதிகாரப்பட்டு வருகின்ற
களவினுள்  அவை  நிகழப் பெறா; இதுவாயின் வரைவிடை வைத்துப்
பிரியவும்  பெறும்  அரசர்க்கு  இன்றியமையாத பிரிவாகலின் என்பது
கருத்து.  இப்  பிரிவு  அரசர்க்கு  உரித்தென்பது தானே  சேறலும்
(தொல்.பொ.27)  என்னும்  சூத்திரத்தாற்  பெறுதும்.  வாளாண்மைக்கு
ஏற்ற பிரிவெனவே, முடியுடை வேந்தரேவலிற் பிரியும் அரசர்கண்ணது
இப்பிரிவென்க. சிறுபான்மை அவ்வேந்தற்கும் உரித்து, ‘வெளிப் படை
தானே
’  (தொல்.பொ.141) என்பதனுள்  இப்பிரிவில்லை என்பராதலின்.
அது,

“பகைவென்று திறைகொண்ட பாய்திண்டேர் மிசையவர்
வகைகொண்ட செம்மனாம் வனப்பார விடுவதோ
புகையெனப் புதழ்சூழ்ந்து பூவங்கட் பொதிசெய்யா
முகைவெண்ப னுதிபொர முற்றிய கடும்பனி.”
     (கலி.31)

இதனுட்   பனியெதிர் பருவங் குறிஞ்சியாகலிற் களவிற் பிரிந்தான்
வாளாணெதிரும் வென்றி  தோழிக்குத்  தலைவி  கூறியவாறு.  இஃது
அவன்வயிற் பரத்தைமை கருதாதது.

நாணு   நெஞ்சு அலைப்ப விடுத்தற்கண்ணும் - தலைவிக்கு இன்றி
யமையாத  நாணுத்தான்  அவள்  நெஞ்சினை  அலைத்தலின் அவள்
அந்  நாணினைக்  கைவிடுத்தற்  கண்ணும்; அஃது உடன்போக்கினும்
வரைவு  கடாவும்  வழியும் வேட்கைமீ  தூர்ந்து நாண்துறந்துரைத்தல்
போல்வன.

“அளிதோ தானே நாணே நம்மொடு
நனிநீ டுழந்தன்று மன்னே இனியே
வான்பூங் கரும்பின் ஓங்குமணற் சிறுசிறை
தீம்புன னெரிதர வீந்துக் காஅங்குத்
தாங்கு மளவைத் தாங்கிக்
காம நெரிதரக் கைந்நில் லாதே.”
           (குறுந்.149)

இஃது உடன் போக்கு வலித்தமையின் நாண் துறந்து கூறியது.

வரைதல்     வேண்டித் தோழி செப்பிய புரைதீர் கிளவி புல்லிய
எதிரும் - வரைதல் விருப்பினான் தோழி தலைவற்கு வரைவு கடாய்க்
கூறிய புரைதீர் கிளவியைத் தலைவி பொருந்திநின்றே இயற்பழித்தற்கு
மறுத்தாள்போல் நிற்கும் எதிர் மறையையும்:

புரைதீர் கிளவி தலைவனுயர்பிற்கு  ஏலாது இயற்பழித்து உரைக்குங்
கிளவி. அது, “பாடுகம் வாவாழி தோழி” என்னுங் குறிஞ்சிக் கலியுள்,

“இலங்கு மருவித்
 

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 09-09-2016 02:39:41(இந்திய நேரம்)