Primary tabs

ன்றித்
திருமணி ஒளிர்வரும் பூணன் வந்து
புரவலன் போலுந் தோற்ற முறழ்கொள
இரவன் மாக்களிற் பணிமொழி பயிற்றிச்
சிறுதினைப் படுகிளி கடீஇயர் பன்மாண்
குளிர்கொள் தட்டை மதனில புடையாச்
சூரர மகளிரின் நின்ற நீமற்
றியாரை யோவெம் அணங்கியோய் உண்கெனச்
சிறுபுறங் கவையின னாக வதற்கொண்டு
இகுபெயன் மண்ணின் ஞெகிழ்பஞ ருற்றவென்
உள்ளவ னறித லஞ்சி உள்ளில்
கடிய கூறிக் கைபிணி விடாஅ
வெரூஉமான் பிணையி னொரீஇ நின்ற
என்னுரத் தகைமையிற் பெயர்த்துப் பிறி தென்வயிற்
சொல்ல வல்லிற்றும் இலனே அல்லாந்
தினந்தீர் களிற்றிற் பெயர்ந்தோன் இன்றுந்
தோலாவா றில்லை தோழிநாஞ் சென்மோ
சாயிறைப் பணைத்தோட் கிழமை தனக்கே
மாசின் றாதலு மறியா னேசற்
றென்குறைப் புறனிலை முயலும்
அண்க ணாளனை நகுகம் யாமே.”
(அகம்.32)
என்னும் அகப்பாட்டுங் கொள்க.
“எழாஅ வாகலின் எழினலந் தொலைய
அழாஅ தீமோ நொதுமலர் தலையே
யேனல் காவலர் மாவீழ்த்துப் பறித்த
பகழி யன்ன சேயரி மழைக்கண்
நல்ல பெருந்தோ ளோயே கொல்லன்
எறிபொற் பிதிரிற் சிறுபல தாஅய்
வேங்கை வீயுகு மோங்குமலைக் கட்சி
மயிலறி பறியா மன்னோ
பயில்குரல் கவரும் பைம்புறக் கிளியே.”
(நற்.13)
இது தலைவி வேறுபாடு கண்டு ஆராயுந் தோழி தனது
ஆராய்ச்சியை மறைத்துக் கூறியது. ‘நாட்டத்தானும்’ என்னும் உம்மை
முற்று, நாட்ட மெல்லாந் தழீஇயினமையின் ஆனுருபு இடப்
பொருட்டாம். அஃது இடமாக வருகின்ற எட்டனையும் இடத்தியல்
பொருளாக உரைக்கவே அவளை நாடுகின்ற காலமும் மேல்வருகின்ற
எட்டனையுந் தலைவற்கு உரைக்குங் காலமும் ஒருங்கு
நிகழுமென்பதாம். இங்ஙனம் நாடி மதியுடம்படுக்குந் துணையுந்
தலைவற்கு இக்குறை முடிப்பல் என்னாது ஒழுகும்.
குறையுறற்கு எதிரிய
கிழவனை மறையுறப் பெருமையிற்
பெயர்ப்பினும் - இரவுவலியுற்றுக் குறைகூறத் தொடங்கிய
தலைவனைத் தோழி தான் இவ் வொழுகலாறு அறிந்தும் அறிந்திலள்
போலத் தலைவன் பெருமைகூறி அவன் குறிப்பினை மாற்றினும்:
தான்
அறிந்ததனை மறைத்துக் கூறுதலன்றி அன்பின்மை
ஒருதலையாக உடையளல்லள்.
உ-ம்:
“கல்லோங்கு சாரற் கடி புனங் காத்தோம்பு
நல்கூர்ந்தார் மாட்டு நயந்தொழுகித் - தொல்வந்த
வான்றோய் குடிக்கு வடுச்செய்தல் தக்கதோ
தேன்றோய்பூங் கண்ணியீர் நீர்”
“மறுவொடு பட்டன மாமலை நாட
சிறுகுடியோர் செய்வன பேணார் - சிறுகுடிக்கு
மூதான் புறத்திட்ட சூடே போல் நில்லாதே
தாதாடு மார்ப பழி.”
“தகைமான் சிறப்பிற் சான்றோர்க் கொத்த
வகையமை வனப்பினை யாகலின் உலகமொடு
பாற்படற் பாலை மன்னோ காப்புடுத்து
ஓங்குய ரடுக்கத்துச் சார்ந்துவளர் நனந்தலை
நெடுவரை மருங்கிற் குடிமை சான்றோர்
இன்னர் என்னா தின்பம் வெஃகிப்
பின்னிலை முயற்சியின் வருந்தினும்
நும்மோர் அன்னோர்க்குத் தகுவதோ வன்றே.”
என வரும்.
“இவளே, கான னண்ணிய காமர் சிறுகுடி
நீனிறப் பெருங்கடல் கலங்கவுள் புக்கு
மீனெறி பரதவர் மகளே, நீயே
நெடுங்கொடி நுடங்கு நியம மூதூர்க்
கடுந்தோர்ச் செல்வன் காதன் மகனே
நிணச்சுறா வறுத்த வுணக்கல் வேண்டி
இனப்புள் ஓப்பும் எமக்குநலன் எவனோ
புலவு நாறுதுஞ் செலநின் றீமோ
பெருநீர் விளையுளெஞ் சிறுநல் வாழ்க்கை
நும்மொடு புரைவதோ வன்றே
யெம்ம னோரிற் செம்மலு முடைத்தே.”
(நற்.45)
இதுவும் அது.
உலகு உரைத்து ஒழிப்பினும் - அ

