Primary tabs

வ்வொழுக்கம் அறியாள் போற் கரந்த தோழி உலகத்தாரைப்போல்
வரைந்து கொள்ளெனக் கூறித் தலைவனை நீக்கினும்:
உ-ம்:
“கோடீ ரெல்வளைக் கொழுமணிக் கூந்தல்
ஆய்தொடி மடவரல் வேண்டுதி யாயிற்
றெண்கழிச் சேயிறாப் படூஉந்
தண்கடற் சேர்ப்ப வரைந்தனை கொண்மோ”
(ஐங்குறு.196)
அருமையின் அகற்சியும் - அவை கேட்டுப் பிற்றை ஞான்றும்
வந்தவன்மாட்டுச் சிறிது நெஞ்சுநெகிழ்ந்த தோழி அங்ஙனங் கூறாது
இவள் அரியளெனக் கூறுதலும்:
இருவருமுள்வழி
யவன்வர வுணர்தலின் இருவருள்ளமும் உணர்ந்து
அங்ஙனங் கூறினாள்.
“நெருநலு முன்னா ளெல்லையு மொருசிறைப்
புதுவை யாகலிற் கிளத்த னாணி
நேரிறை வளைத்தோணின் றோழி செய்த
ஆரஞர் வருத்தங் களையா யோவென
வெற்குறை யுறுதி ராயிற் சொற்குறை
யெம்பதத் தெளிய ளல்ல ளெமக்கோர்
கட்காண் கடவு ளல்லளோ பெரும
வாய்கோன் மிளகின் அமலையங் கொழுங்கொடி
துஞ்சுபுலி வரிப்புறந் தைவரும்
மஞ்சுசூழ் மணிவரை மன்னவன்மகளே.”
(பொருளியல்)
“தழையொடு தண்கண்ணி தன்மையாற் கட்டி
விழையவுங் கூடுமோ வெற்ப - விழையார்ந்
திலங்கருவி பொன்கொழிக்கு மீர்ங்குன்ற நாட
குலங்கருதி வாழ்வார் மகள்.”
அவள்
அறிவுறுத்துப் பின் வா என்றலும் - தலைவனை நோக்கி நீ
காதலித்தவட்கு நீயே சென்று அறிவித்துப் பின்னர் என்மாட்டு வருக
வென்றலும்:
‘அவன் அறிவுறுத்து’ என்று பாடமோதுவாரும் உளர்.
உ-ம்:
“தன்னையுந் தானாணுஞ் சாயலாட் கிஃதுரைப்பின்
என்னையும் நாணப் படுங்கண்டாய் - மன்னிய
வேயேர்மென் றோளிக்கு வேறாய் இனியொருநாள்
நீயே யுரைத்து விடு.”
இது நீயே யுரையென்றது.
“நாள்வேங்கை பொன்சொரியும் நன்மலை நன்னாட
கோள்வேங்கை போற்கொடியர் என்னைமார் -
கோள்வேங்கை
அன்னையால் நீயும் அருந்தழையாம் ஏலாமைக்
கென்னையோ நாளை எளிது.”
(திணை.நூற்.20)
இது கையுறைமறுத்துப் பின் வருக என்றது
இவை ஒரு கூற்றாக வருவன வுளவேற் காண்க.
பேதைமை ஊட்டலும் - அங்ஙனம் பின் வருகவென்றுழி முன்
வந்தானை அறியாமை ஏற்றிக் கூறலுந், தலைவியையும் அங்ஙனம்
அறியாமை யேற்றிக் கூறலும்:
உ-ம்:
“நெடுந்தேர் க

