தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

Tholkappiyam-nachinarkinyam

நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   3527


தோழி அந்தரத்
திமிழ்பெயல் தலைஇய இனப்பல் கொண்மூத்
தவிர்வில் வெள்ளந் தலைத்தலை சிறப்பக்
கன்றுகால் ஒய்யுங் கடுஞ்சுழி நீத்தம்
புன்றலை மடப்பிடிப் பூசல் பலவுடன்
வெண்கோட் டியானை விளிபடத் துழவும்
அகல்வாய்ப் பாந்தட் படாஅர்ப்
பகலு மஞ்சும் பனிக்கடுஞ் சுரனே.”
          (அகம்.68)

இது, தாயது  துயிலுணர்ந்து தலைவன் வந்தமை தோழி தலைவிக்குக்
கூறிக் குறிவயிற்சென்றது.

“சேய்விசும் பிவர்ந்த செழுங்கதிர் மண்டிலம்
மால்வரை மறையத் துறைபுலம் பின்றே
இறவருந்தி யெழுந்த கருங்கால் வெண்குருகு
வெண்குவட் டருஞ்சிறைத் தாஅய்க் கரைய
கருங்கோட்டுப் புன்னை இறைகொண் டனவே
கணைக்கான் மாமலர் கரப்ப மல்குகழித்
துணைச்சுறா வழங்கலும் வழங்கும் ஆயிடை
எல்லிமிழ் பனிக்கடன் மல்குசுடர்க் கொளீஇ
எமரும் வேட்டம் புக்கனர் அதனால்
தங்கி னெவனோ தெய்ய பொங்குபிசிர்
முழவிசைப் புணரி யெழுதரும்
உடைகடற் படப்பையெம் முறைவி னூர்க்கே.”
    (நற்.67)

இஃது   இரவுக்குறி   வேண்டிய தலைவற்குத் தோழி  உடன்பட்டுக்
கூறியது.

“ஆம்பல் நுடங்கும் அணித்தழையும் ஆரமுந்
தீம்புனல் ஊரன் மகளிவள் - ஆய்ந்தநறுந்
தேமலர் நீலம் பிணையல் செறிமலர்த்
தாமரை தன்னையர் பூ.”
               (திணை.ஐம்.40)

இஃது  இரவுக்குறி நேர்ந்த தோழி இந்நிலத்தினைகண் நீ வருங்கால்
இன்னபெற்றியான் வருவாயாகவென்றது.

“கடற்கானற் சேர்ப்ப கழியுலாஅய் நீண்ட
அடற்கானற் புன்னைதாழ்ந் தாற்ற - மடற்கானல்
அன்றில் அகவும் அணிநெடும் பெண்ணைத்தே
முன்றில் இளமணன்மேன் மொய்த்து”
      (திணை.நூற்.5)

இஃது இரவுக்குறியிடங் காட்டித் தோழி கூறியது.

“எம்மூர் வாயில் ஒண்டுறைத் தடைஇய
கடவுண் முதுமரத் துடனுறை பழகிய
தேயா வளைவாய்த் தெண்கட் கூருகிர்
வாய்ப்பறை யசாவும் வலிமுந்து கூகை
மையூன் றெரிந்த நெய்வெண் புழுக்கல்
எலிவான் சூட்டொடு மலியப் பேணுதும்
எஞ்சாக் கொள்கையெங் காதலர் வரனசைஇத்
துஞ்சா தலமரு பொழுதின்
அஞ்சுவரக் கடுங்குரல் பயிற்றா தீமே.”
          (நற்.83)

இஃது    இரவுக்குறிவந்த    தலைவன்   சிறைப்புறமாகக்   கூகைக்கு
உரைப்பாளாய்த் தோழி கூறியது.

“நிலவு மறைந்தன்று இருளும் பட்டன்று
ஓவத் தன்ன விடனுடை வரைப்பில்
பாவை யன்ன நிற்புறங் காக்குஞ்
சிறந்த செல்வத் தன்னையுந் துஞ்சினள்
கெடுத்துப்படு நன்கல மெடுத்துக்கொண் டாங்கு
நன்மார் படைய
 

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 09-09-2016 02:48:46(இந்திய நேரம்)