தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tholkappiyam-nachinarkinyam

நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   3528


முயங்கி மென்மெலக்
கண்டனம் வருகஞ் சென்மோ தோழி
கீழு மேலுங் காப்போர் நீத்த
வறுந்தலைப் பெருங்களிறு போலத்
தமியன் வந்தோன் பனியலை நிலையே.”
        (நற்.182)

இது தலைவனைக் கண்டு முயங்குகம் வம்மோ என்றது.

வேண்டாப் பிரிவினும் -  தலைவன்றான்  புணர்ச்சியை  விரும்பாது
பிரிவை விரும்பிய இடத்தும்:

அப்பிரிவு  தண்டாதிரத்தலை முனிந்த மற்றையவழி ‘இட்டுப் பிரிவும்
அருமைசெய்   தயர்த்தலு’   (111)   மாம்;   ஆண்டுத்  தலைவற்குந்
தலைவிக்குங் கூறுவன கொள்க.

உ-ம்:

“முத்தம் அரும்பு முடத்தாண் முதிர்புன்னை
தத்துந் திரையலைக்குந் தண்ணங் கடற்சேர்ப்ப
சித்திரப் பூங்கொடியே யன்னாட் கருளீயாய்
வித்தகப் பைம்பூணின் மார்பு.”
          (திணை.ஐம்.42)

“இறவுப்புறத் தன்ன பிணர்படு தடவுமுதற்
சுறவுக்கோட் டன்ன முள்ளிலைத் தாழை
பெருங்களிற்று மருப்பின் அன்ன அரும்புமுதிர்பு
நன்மா னுழையின் வேறுபடத் தோன்றி
விழவுக்களங் கமழு முரவுநீர்ச் சேர்ப்ப
இனமணி நெடுந்தேர் பாக னியக்கச்
செலீஇய சேறி யாயி னிவளே
வருவை யாகிய சின்னாள்
வாழ்வா ளாதல் அறிந்தனை சென்மே.”
         (நற்.19)

இது பிரிவு வேண்டியவழிக் கூறியது.

“சாரற் பலவின் கொழுந்துணர் நறும்பழம்
இருங்கல் விடரளை வீழ்ந்தென வெற்பிற்
பெருந்தே னிறாலொடு சிதறுநாடன்
பேரமர் மழைக்கண் கலுழத்தன்
சீருடை நன்னாட்டுச் செல்லு மன்னாய்.”
    (ஐங்குறு.214)

எனவும் வரும்.

வேளாண் பெருநெறி வேண்டிய இடத்தும் - தலைவற்குத் தாஞ் சில
கொடுத்தலைத் தலைவி வேண்டியவிடத்தும்:

அது  தலைவி  ‘வேளா ணெதிரும்  விருந்தின்கண்’  (107)  தோழி
கூறுவதாம்.

உ-ம்:

“பன்னாள் எவ்வந் தீரப் பகல்வந்து
புன்னையம் பொதும்பின் இன்னிழற் கழிப்பி
மாலை மால்கொள நோக்கிப் பண்ணாய்ந்து
வலவன் வண்டேர் இயக்க நீயுஞ்
செலவுவிருப் புறுதல் ஒழிகதில் அம்ம
செல்லா நல்லிசைப் பொலம்பூண் திரையன்
பல்பூங் கானற் பவத்திரி யனவிவள்
நல்லெழில் இளநலந் தொலைய வொல்லெனக்
கழியே யோத மல்கின்று வழியே
வள்ளெயிற் றரவொடு வயமீன் கொட்குஞ்
சென்றோன் மன்ற மான்றின்று பொழுதென
நின்றிறத் தவலம் வீட இன்றிவண்
சேப்பின் எவனோ பூக்கேழ் புலம்ப
பசுமீன் நொடுத்த வெண்ணென்மாத் தயிர்மிதி
மிதவை மாவார் குநவே நினக்கே
வடவர் தந்த வான்கேழ் வட்டம்
குடபுல வுறுப்பிற் கூட்டுபு நிகழ்த்திய
வண்டிமிர் நறுஞ்சாந் தணிகுவ
 

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 09-09-2016 02:48:58(இந்திய நேரம்)