தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

Tholkappiyam-nachinarkinyam

நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   3544


ண்டனம் வருகஞ் சென்மோ தோழி
தண்டா ரகலம் வண்டிமிர் பூதப்
படுமணிக் கலிமா கடைஇ
நெடுநீர்ச் சேர்ப்பன் வரூஉ மாறே.”
          (நற்.235)

இது,  தலைவன் வரைவொடு   வருகின்றமை  காண்கம்  வம்மோ
வென்றது.

பாங்குற     வந்த  நாலெட்டும்  -  பாங்கியர்  பலருள்ளும்  பாங்
காந்தன்மை சிறப்பக் கூறிய முப்பத்திரண்டும்; நாலெட்டுமென உம்மை
விரிக்க;   வகையும்   -   இக்கூற்றுக்களிலே  வேறுபட  வருவனவும்;
தாங்கருஞ்    சிறப்பின்    தோழி    மேன    -    பொறுத்தற்கரிய
சிறப்பினையுடைய தோழியிடத்தன எ-று.

எனவே,     ஒன்றிய தோழிக்கன்றி ஏனையோர்க்கு இக்கூற்று இன்
றென்றான்.  தாய்த்தாய்க் கொண்டுவருஞ் சிறப்பும், இருவர் துன்பமுந்
தான் உற்றாளாகக் கருதுஞ் சிறப்பும் உடைமையின் ‘தாங்கருஞ் சிறப்பு’
என்றான்.   உரைத்துழிக்   கூட்டத்தோடே   அகற்சியும்   என்றலும்
ஊட்டலும் உரைத்தலும் அச்சுறுத்தலும் எஞ்சாமற் கிளந்த இருநான்கு
கிளவியும்  பாங்குற  வந்த  என்க.  நாட்டத்தின் கண்ணும் எஞ்சாமற்
கிளந்த     என்க.    என்றது    ஆராய்ச்சியுடனே    இவ்வெட்டுங்
கூறுமென்றான். பெயர்ப்பினும் ஒழிப்பினும் உரைத்துழிக் கூட்டத்தோடு
எஞ்சாமற்    கிளந்த    என்க.   ஏனைப்பொருள்கள்   ஏழனுருபும்
வினையெச்சமுமாய்   நின்ற  வற்றைப்  பாங்குறவந்த  என்பதனொடு
முடித்து   அப்பெயரெச்சத்தினை   நாலெட்   டென்னும்  பெயரொடு
முடித்து அதனைத் தோழிமேனவென முடிக்க.

இனி ‘வகை’ யாற்கொள்வன வருமாறு:

“அன்னை வாழிவேண் டன்னை நெய்தல்
நீர்ப்படர் தூம்பின் பூக்கெழு துறைவன்
எந்தோள் துறந்த காலை யெவன்கொல்
பன்னாள் வருமவ னளித்த பொழுதே.”
     (ஐங்குறு.109)

இஃது அறத்தொடு நின்றபின் வரைவான் பிரிந்து நீட்டித்துழி ஐயுற்ற
செவிலி  அவன்  நும்மைத்  துறந்தான்  போலும்  நுங்கட்கு  அவன்
கூறியதிறம் யாதென்றாட்குத் தோழி கூறியது.

“அன்னை வாழிவேண் டன்னை கழனிய
முண்டக மலருந் தண்கடற் சேர்ப்பன்
எந்தோள் துறந்தன னாயின்
எவன்கொன் மற்றவ னயந்த தோளே.”
      (ஐங்குறு.108)

இஃது  அறத்தொடு  நின்றபின் வரைவுநீட  மற்றொரு  குலமகளை
வரையுங் கொலொன்று ஐயுற்ற செவிலி குறிப்
 

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 09-09-2016 02:52:03(இந்திய நேரம்)