தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tholkappiyam-nachinarkinyam

நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   3545


பறிந்த தோழி அவட்குக் கூறியது.

“அன்னை வாழிவேண் டன்னை புன்னையொடு
ஞாழல் பூக்குந் தண்ணந் துறைவன்
இவட்கமைந் தனனாற் றானே
தனக்கமைந் தன்றிவண் மாமைக் கவினே.
    (ஐங்குறு.103)

இது, வதுவைநிகழாநின்றுழித் தாய்க்குக் காட்டித் தோழி கூறியது.

“கன்னவி றோளான் கடிநாள் விலக்குதற்
கென்னை பொருணினைந்தா ரேந்திழாய் - பின்னர்
அமரேற்றுக் கொள்ளுமென் றஞ்சினே னஞ்சார்
நமரேற்றுக் கொள்ளாத ஞான்று.”

இது, சுற்றத்தார் பொருள்வேண்டி மறுத்தாரென்றது.

“நொதும லாளர் கொள்ளா ரிவையே
யெம்மொடு வந்து கடலாடு மகளிரும்
நெய்தலம் பகைத்தழைப் பாவை புனையார்
உடலகங் கொள்வோ ரின்மையிற்
றொடலைக் குற்ற சிலபூ வினரே.”
          (ஐங்குறு.187)

இது கையுறை மறுத்தது.

“அம்ம வாழி தோழி நம்மலை
வரையா மிழியக் கோட னீடக்
காதலர்ப் பிரிந்தோர் கையற நலியுந்
தண்பனி வடந்தை யச்சிரம்
முந்துவந் தனர்நங் காத லோரே.”
         (ஐங்குறு.223)

இது,    வரைவிடைப்    பிரிந்தோன்  குறித்த   பருவத்திற்குமுன்
வருகின்றமை யறிந்த தோழி தலைவிக்குக் கூறியது. (23)

செவிலி கூற்று நிகழுமாறு கூறல்
 

115.
களவல ராயினுங் காமமெய் படுப்பினும்
அளவுமிகத் தோன்றினுந் தலைப்பெய்து காணினுங்
கட்டினுங் கழங்கினும் வெறியென விருவரும்
ஒட்டிய திறத்தாற் செய்திக் கண்ணும்
ஆடிய சென்றுழி யழிவுதலை வரினுங்
காதல் கைமிகக் கனவி னரற்றலுந்
தோழியை வினவலுந் தெய்வம் வாழ்த்தலும்
போக்குட னறிந்தபிற் றோழியொடு கெழீஇக்
கற்பின் ஆக்கத்து நிற்றற் கண்ணும்
பிரிவின் எச்சத்தும் மகணெஞ்சு வலிப்பினும்
இருபாற் குடிப்பொரு ளியல்பின் கண்ணும்
இன்ன வகையிற் பதின்மூன்று கிளவியோடு
அன்னவை பிறவுஞ் செவிலி மேன.
 

இது,    செவிலிகூற்று நிகழுமாறு கூறுகின்றது. அக்கூற்றுச் செவிலி
தானே  கூறப்படுவனவுந்,  தலைவியுந்  தோழியுங் கொண்டு கூற்றாகக்
கூறப்படுவனவுமென   இருவகையவாம்;  இக்கூறப்பட்ட  பதின்மூன்று
கிளவியும்  அவைபோல்வன பிறவுஞ் செவிலி தானே கூறப்படுவனவுந்
தலைவியுந் தோழியும் அவள் கூற்றாய்க் கொண்டெடுத்து மொ
 

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 09-09-2016 02:52:14(இந்திய நேரம்)