தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

Tholkappiyam-nachinarkinyam

நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   3557


று   இரண்டற்குக் காணரங் கூறுதலின், இதற்குங்  குறிப்பு மிகுதலான்
உணர்தலெனக்காரணங்  கொடுத்தல்  வேண்டுமென்றுணர்க. ‘நாற்றமுந்
தோற்றமும்’  (தொல்.பொ.114) என்பதனுட் கூறியவாறன்றி முன்னுறவை
இடைவைத்தார்,  அவ்விரண்டினான்  உணருங்காலும்  இக் குறிப்பான்
உணரவேண்டு    மென்றற்கு.    இம்   மூன்றும்   முற்கூறினவேனும்
ஒரோவொன்றாற்   கூட்டமுணரின்   தலைவியை  நன்குமதித்திலளாவ
ளென்றற்கு இம்மூன்றும் வேண்டுமென்று ஈண்டுக் கூறினார்.

உ-ம்:

“கோனே ரெல்வளை தெளிர்ப்ப நின்போல்
யானு மாடிக் காண்கோ தோழி.”

இது  கூட்ட முணராதள்போல  நாணிற்கு  மாறாகாமாற்  கூறலின்,
முன்னுறவுணர்தல்.

“நின்னின் விடாஅ நிழற்போற் றிரிதருவாய்
என்னீ பெறாத திதென்.”
                     (கலி.61)

இது குறையுற வுணர்தல்.

“ஏனல் காவ லிவளு மல்லள்”

என்பது அவன் வரவுணர்தல்.                              (36)

தோழி மதியுடம்படுத்தபின்னல்லது தலைவனிரந்து
பின்னில்லானெனல்
 

128.
அன்ன வகையா னுணர்ந்தபி னல்லது
பின்னிலை முயற்சி பெறானென மொழிப.
 

இது  மதியுடம்பட்ட  பின்னல்லது   தலைவன்  கூற்று  நிகழ்த்தப்
பெறானென்கிறது.

(இ-ள்)   அன்னவகையான் உணர்ந்தபின் அல்லது - அம்மூவகை
யானுந் தோழி மதியுடம்படுத்த பின்னல்லது;  பின்னிலை - இவன் ஒரு
குறையுடையனென்று தோழி உய்த்துணர நிற்குமிடத்து; முயற்சிபெறான்
என   மொழிப  -  கூற்றான்  அக்குறை  முடித்தல்  வேண்டுமென்று
முடுக்குதல் பெறானென்று கூறுப ஆசிரியர் எ-று.

தோழி தன்னை வழிபட்டவாறு கண்டு  மதியுடம்பட்ட வாறுணர்ந்து
கூற்றான் உணர்த்தும்.

அது  “நெருநலு  முன்னாள்” என்பதனுள்  “ஆரஞர் வருத்தங்
களையாயோ”
என்றவாறு காண்க.                          (37)

தோழி தலைவியைக் கூட்டவும் பெறுமெனல்
 

129.
முயற்சிக் காலத் ததற்பட நாடிப்
புணர்த்த லாற்றலும் அவள்வயி னான.
 

இது,  தலைவன்   முயற்சி  கூறிய  முறையே   தோழி   முயற்சி
பிறக்குமிடங் கூறுகின்றது.

(இ-ள்) முயற்சிக்காலத்து - தலைவன் அங்ஙனங் கூடுதற்கு முயற்சி
நிகழ்த்துங்காலத்தே;   நாடி   அதற்படப்  புணர்த்தலும்  -  தலைவி
கூடுதற்கு   முயலுங்   கருத்தினை  ஆராய்ந்து  அக்கூட்டத்திடத்தே
உள்ளம்  படும்படி  கூட்டுதலும்;  அவள்  வயின்  ஆன  ஆற்றல் -
தோழியிடத்து உண்டான கடைப்பிடி எ-று.

ஆற்றல் ஒன்றனை முடிவுபோக்கல். உம்மை, எச்சவும்மை. மதி
 

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 09-09-2016 02:54:35(இந்திய நேரம்)