Primary tabs

லனே.” (அகம்.276)
இதனுட் பரந்து
வெளிப்படாதாகி வருந்துக என்னலம் என்றமையிற்
சேரிப்பரத்தையைப் புலந்து
கூறுதன் முதலியனவுங் கொள்க. இன்னும்
வேறுபட வருவனவெல்லாம்
இதன் கண் அடக்குக.
(10)
அகநகர்க்கட் புகுதற்குரிய வாயில்கள்
கூற்று இவை எனல்
மெல்லியற் பொறையும் நிறையும் வல்லிதின்
விருந்துபுறந் தருதலுஞ் சுற்றம் ஓம்பலும்
பிறவும் அன்ன கிழவோள் மாண்புகள்
முகம்புகல் முறைமையிற் கிழவோற் குரைத்தல்
அகம்புகல் மரபின் வாயில்கட் குரிய.
இது,
விருந்து முதலிய வாயில்கள் போலாது அகநகர்க்கட்
புகுதற்குரிய வாயில்கள் கூற்று உணர்த்துகின்றது.
(இ-ள்.)
கற்பும் -கணவன் முதலியோர் கற்பித்த நிலையில்
திரியாத
நல்லொழுக்கமும்; காமமும் - அன்பும்; நற்பால்
ஒழுக்கமும் -
எவ்வாற்றானுந் தங் குலத்திற்கு ஏற்றவாற்றான் ஒழுகும்
ஒழுக்கமும்;
மெல் இயற்பொறையும் - வல்லென்ற
நெஞ்சொடு பொறுக்கும்
அவனைப் போலாது ஒரு தலையாக
மெல்லென்ற நெஞ்சினராய்ப்
பொறுக்கும் பொறையும்; நிறையும் - மறை
புலப்படாமை நிறுக்கும்
நெஞ்சுடைமையும்; வல்லிதின் விருந்து புறந்தருதலும் - வறுமையுஞ்
செல்வமுங் குறியாது வல்லவாற்றான் விருந்தினரைப் பாதுகாத்து அவர்
மனமகிழ்வித்தலும்; சுற்றம் ஓம்பலும் - கொண்டோன் புரக்கும்
நண்புடை மாந்தருஞ் சுற்றத்தாருங் குஞ்சர முதலிய காலேசங்களும்
பலபடை மாக்களும் உள்ளிட்ட சுற்றங்களைப் பாதுகாத்து அவை
உண்ட பின் உண்டலும்; அன்னபிறவும் கிழவோள் மாண்புகள் -
அவை போல்வன பிறவுமாகிய தலைவியுடைய மாட்சிமைகளை;
முகம்புகன் முறைமையிற் கிழவோற்கு உரைத்தல் - அவன்
முகம்புகுதும் முறைமை காரணத்தான் தலைவற்குக் கூறுதல்;
அகம்புகன் மரபின் வாயில்கட்கு உரிய -
அகநகர்க்கட் புகுந்து பழகி
அறிதன் முறைமையினையுடைய
வாயில்களுக்குரிய, என்றவாறு.
அன்னபிறவாவன,
அடிசிற்றொழிலுங், குடிநீர்மைக்
கேற்ற
வகையான் தலைமகள்
ஒழிந்த தலைமகளிரையும்
மனமகிழ்
வுறுத்தலுங், காமக்கிழத்தியர் நண்புசெய்து நன்கு
மதிக்கப்படுதலும்
போல்வன. புகலுதல் - மகிழ்தல். செவிலி கூறாமை கொள்க, அவட்கு
முகம்புகன்
முறைமையி

