தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tholkappiyam-nachinarkinyam

நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   3663


யமைந்தது.  இது  யாண்டு  நிகழுமெனின்  இவனொடு  கூடாமையின்
இவன் ஆற்றானாவ னென்றானும் ‘உணர்ப்புவயின் வாரா வூடற்’ கட்
(தொல்.பொ.150)     புலக்குமென்றானும்     பிறவாற்றானுமென்றானும்
உசாவும்.

“மாண மறந்துள்ளா நாணிலிக் கிப்போர்
புறஞ்சாய்ந்து காண்டைப்பாய் நெஞ்சே யுறழ்ந்திவனைப்
பொய்ப்ப விடேஎ மெனநெருங்கின் தப்பினேன்
என்றடி சேர்தலு முண்டு.”
                  (கலி.89)

எனவரும்.

“பகலே பலருங் காண நாண்விட்
டகல்வயற் படப்பை யவனூர் வினவிச்
சென்மோ வாழி தோழி.”
                  (நற்.365)

இது, தோழியோடு உசாவியது.                             (10)

மடமை அழியுமிடமிவை எனல்
 

204.
தன்வயின் கரத்தலும் அவன்வயின் வேட்டலும்
அன்ன இடங்கள் அல்வழி யெல்லாம்
மடனொடு நிற்றல் கடனென மொழிப.
 

இது.      பெண்டிர்க்கியல்பாகிய      மடமை     யழிவதொரு
வழுவமைக்கின்றது.

(இ-ள்,)     தன்வயின்  கரத்தலும் - தலைவன் தலைவியிடத்தே
புறத்தொழுக்க  மின்றென்று பொய்கூறலும்: அவன் வயின் வேட்டலும்
-  அங்ஙனங்  கரந்து  கூறிய  தலைவன்கட்  டலைவி விரும்புதலும்;
அன்ன   இடங்கள்  அல்வழி  எல்லாம்  -  ஆகிய  அவைபோலும்
இடங்களல்லாத இடத்தெல்லாம்;மடனொடு நிற்றல் கடன் என மொழிப
-  தலைவி மடமையுடையளாகி நிற்றல் கடப்பாடென்று கூறுவர் புலவர்
எ-று,

எனவே,  இவ்வீரிடத்தும்  மடனழிதலுடையளென வழுவமைத்தார்.
அது  “குதிரை  வழங்கிவருவல்”  (கலி.96)  என்று அவன் கரந்தவழி,
அதனை  மெய்யெனக்  கோடலன்றே  மடமை, அங்ஙனங்கொள்ளாது
அறிந்தேன்    குதிரைதானெனப்   பரத்தையர்கட்   டங்கினாயெனக்
கூறுதலின் இது மடனழிந்த வழுவமைதியாயிற்று,

“கவவுக்கை ஞெகிழ்ந்தமை போற்றி மதவுநடைச்
செவிலி கையென் புதல்வனை நோக்கி
நல்லோர்க் கொத்தனிர் நீயிர் இஃதோ
செல்வற் கொத்தனம் யாமென மெல்லவென்
மகன்வயிற் பெயர்தந் தேனே.”            
(அகம்.26)

என்றவழி,  மனத்து  நிகழ்ந்த வேட்கையை மறைத்து வன்கண்மை
செய்து   மாறினமையின்  அதுவும்  மடனழிந்து  வழுவாகியமைந்தது.
அன்ன இடமென்றதனான்,

“யாரினுங் காதல மென்றேனா ஊடினாள்
யாரினும் யாரினும் என்று.”             
(குறள்.1314)

என்றாற்போல மடனழிய வருவனவுங்
 

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 09-09-2016 03:14:57(இந்திய நேரம்)